சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனை புயல்களை சந்தித்த 2020? ஆம்பன், நிசர்கா, கடி, நிவர் ஆகியவை வரிசையாக வந்து சென்றன. இந்த புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி என்பதை பார்ப்போம். அடுத்து வரவுள்ள புதிய புயலுக்கு யார் பெயர் வைத்தது?

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடும் முறை உள்ளது. அந்த வகையில் வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன.

ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை வழங்கும். 2000ஆம் ஆண்டு உலக வானிலை நிறுவனம் மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. அதன்படி கடி (வேகம்), தேஜ் (வேகம்), மரசு (தமிழ் இசைக் கருவி), ஆக் (நெருப்பு) ஆகிய பெயர்களை இந்தியா பரிந்துரைத்துள்ளது.

சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்

அகரவரிசை

அகரவரிசை

இதற்கான குழு, நாடுகளின் அகரவரிசைப்படி , அவை பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும். வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள் என அகரவரிசை போய் கொண்டே இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர் பட்டியலில் 3ஆவது உள்ள பெயர்தான் நிவர்.

ஆம்பன் புயல்

ஆம்பன் புயல்

இந்த பெயரை ஈரான் பரிந்துரைத்தது. ஆம்பன் புயலுக்கு தாய்லாந்து வைத்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட புயல் பெயர்களின் பட்டியலில் கடைசி பெயர் ஆம்பன். கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ராய்காட்டு மாவட்டத்தில் நிசர்கா புயல் தாக்கியது. நிசர்கா என்றால் இயற்கை என்று அர்த்தம்.

சோமாலியா

சோமாலியா

அந்த புயலுக்கு வங்கதேசம் பெயர் வைத்தது. சோமாலியாவில் கரையை கடந்த கடி புயலின் பெயர் இந்தியா பரிந்துரைத்ததாகும். அது போல் புதிதாக உருவாகும் புரேவி புயலுக்கு மாலத்தீவு பெயரிட்டுள்ளது. தாக்டே புயலுக்கு மியான்மரும், யாஸ் புயலுக்கு ஓமனும், குலாப் புயலுக்கு பாகிஸ்தானும் பெயரிட்டுள்ளது.

வங்கக் கடல்

வங்கக் கடல்

அரபிக் கடல், வங்கக் கடல், வடக்கு இந்திய பெருங்கடல் ஆகியன ஆண்டுக்கு 5 புயல்களை சந்திக்கின்றன. புதிதாக தயாரிக்கப்பட்ட புயல்களின் பெயர் பட்டிலை வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்படும் புயல்களுக்கு பெயர்களை வைத்து கொள்ளலாம்.

English summary
How the cyclones are named and suggested by whom? Who coined name for the new cyclone Burevi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X