India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல ஹோட்டலின் பாத்ரூமில்.. திடீரென அலறி கத்திய பெண்.. ராத்திரியில் மிரண்ட புரசைவாக்கம்.. என்னாச்சு

Google Oneindia Tamil News

சென்னை: பிரபலமான ஹோட்டல்களின் பாத்ரூமில் பெண்களை குறி வைத்து, வீடியோ எடுப்பது தொடர்கதையாகி வருகிறது.. அந்த வகையில், இப்போதும் ஒரு ஹோட்டல் பெயர் அடிபட்டுள்ளது.

கிண்டி ரயில் நிலையம் அருகே ஒரு புகழ்பெற்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.. கடந்த ஜனவரி மாதம், இதற்கு நிறைய கிளைகளும் உண்டு.. இந்த ஹோட்டலில்தான் அந்த சம்பவம் நடந்தது.

அறைக்குள் அரங்கேறிய 'அந்த’ நடனம்! குஷியான திருச்சி ஒன்றிய சேர்மன்! யார் அந்த 'மஞ்சள்’ சட்டை விஐபி..?அறைக்குள் அரங்கேறிய 'அந்த’ நடனம்! குஷியான திருச்சி ஒன்றிய சேர்மன்! யார் அந்த 'மஞ்சள்’ சட்டை விஐபி..?

இந்த ஹோட்டலின் பாத்ரூமில் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றார்..

 பாரதி - திமுக

பாரதி - திமுக

அவர் பெயர் பாரதி.. சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.. மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருபவர்.. இவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளரை சந்திப்பதற்காக அப்போது கிண்டி வந்திருக்கிறார்.. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணலில் கலந்துக்கொண்டு கிண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள இந்த ஹோட்டலுக்கு மதியம் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

 அட்டை பெட்டி

அட்டை பெட்டி

அங்குள்ள பாத்ரூமில் அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனில் கேமரா ஆன் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டார் அந்த செல்போனில் வீடியோ ஆன் ஆகி கொண்டிருந்ததாம்.. பிறகு அந்த செல்போனை பறிமுதல் செய்து கிண்டி போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட, சம்பந்தப்பட்ட கண்ணன் என்ற இளைஞரையும் கைது செய்தனர். அந்த நபர் அதே ஓட்டலில் சப்ளையராக வேலை பார்ப்பவராம்.

டவுட்டன்

டவுட்டன்

இப்போது இது போலவே இன்னொரு சம்பவம் இதே சென்னையில் நடந்துள்ளது.. புரசைவாக்கம் "டவுட்டனில்" உள்ள பிரபலமான ஹோட்டல் அது.. அந்த காலத்தில் இருந்தே புகழ்பெற்ற ஹோட்டலும்கூட.. கொடுங்கையூரை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், தன்னுடைய குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக, இரவு நேரம் இங்கு வந்துள்ளார்.. அப்போது, ஹோட்டலில் இருக்கும் பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.. பெண்கள் கழிப்பறை பக்கத்திலேயே ஆண் கழிப்பறையும் உள்ளது..

பாத்ரூம்

பாத்ரூம்

இந்த பெண் பெண் கழிப்பறைக்குள் செல்லும்போது, பக்கத்தில் இருந்த ஆண் கழிப்பறையிலிருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் அந்த பெண்ணை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஓடிச்சென்று ஆண்கள் கழிப்பறை கதவை இரு கைகளாலும் மூடிக் கொண்டு, கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே ஓடிவந்த உறவினர்கள், ஓட்டல் ஊழியர்களும் கழிப்பறை கதவை திறந்து, உள்ளே சிக்கிய இளைஞரை பிடித்து வைத்து, வேப்பேரி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

 ஷாப்பிங் மால்

ஷாப்பிங் மால்

போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞனை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.. அந்த இளைஞர் பெயர் முகமது யூசுப்.. 22 வயதாகிறது.. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராம்.. புரசைவாக்கத்தில் உள்ள தங்கி, இந்த ஹோட்டல் அருகேயுள்ள பிரபல ஷாப்பிங் கடையில், 2 வருடங்களாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது... இதற்கு பிறகு, யூசுப்பின் போனை போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போது, கத்தி கூச்சலிட்ட பெண்ணின் போட்டோவோ, வீடியோவோ எதுவும் அதில் இல்லை...

 ஆபாச வீடியோக்கள்

ஆபாச வீடியோக்கள்

ஆனால் ஏராளமான வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் அதில் நிறைந்து இருந்தன.. குறிப்பாக, கழிப்பறைக்கு செல்லும் பெண்களை மட்டுமே குறி வைத்து போனில் வீடியோ எடுப்பதை யூசுப் வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யலாம் என்றால், அந்த பெண் புகார் தர மறுத்து விட்டார்.. அதனால், அந்த இளைஞரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்..!

English summary
How the vepperi police arrested a shopping mall employee and what happened in Purasaiwakkam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X