சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு! எப்போது விண்ணப்பிக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகள் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு பெற முடியும்.

அதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் எப்போது முதல் விண்ணப்பிப்பது என்பது குறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

how to apply 25 percentage quota seats in private schools under RTE in tamilnadu

இதன்படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்ட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு தொடக்க நிலை பள்ளிகளில் எல்.கே.ஜி.முதல் 1ம் வகுப்பு வரை 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த சட்டப்பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறுவதற்கும், அதன்பின்னர் சேர்க்கைக்கு கோருவதற்கும் ஏப்ரல் 22ம் தேதி முதல் மே மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும்.

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையினை அந்தந்த சுயநிதி தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் பெயர் பலகையில் ஏப்ரல் 10ம் தேதி வெளியிட வேண்டும் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

English summary
how to apply 25 percentage quota seats in private schools under RTE in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X