சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்தியான வேளை.. வயிறு "கபா கபா"ன்னு கவ்விக் குதிக்கும் சமயம்.. எஸ்... இந்த செய்தியைப் படிக்க இதுதான் கரெக்ட் டைம் பாஸ்!

கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும். ஆனா இதப் பாத்துட்டு " இப்படி சாப்பிட்டா குடும்பம் வெளங்குமா"ன்னு எல்லாம் கேக்கப்படாது... இப்படி ஒரு பன்ச் லைனுடன் ஒரு பரபர வீடியோ உலாவி வருகிறது வாட்ஸ் ஆப்பில். வாங்க அவுக சாப்பிடுறதை எட்டிப் பார்த்துட்டு ஓடியாந்துரலாம்...!

How to cook Nattukozhi Kuzhambu see this viral video

செமத்தியான நாட்டுக் கோழிக் குழம்பு வைக்கும் காட்சி இது.. கிராமத்து பக்கம் சமையல் நடக்கிறது. நல்ல வெடப்பான நாட்டுக் கோழி மாதிரி தெரிகிறது. 2, 3 கோழி இருக்கிற மாதிரி தெரியுது. பெரிய சட்டி.. நல்லா உரிச்சு, பீஸ் பீஸா வெட்டி (அடடா ஒரு பாப்பா வருதுப்பா.. இருங்க.. அது கிட்ட பேசிட்டு வருவோம்..பேசியாச்சு.. பாப்பாவை ஓரமா உட்கார வச்சாச்சு).

எங்க விட்டோம்.. ஆங்.. நல்லா வெட்டிய கோழிக்கறியை, முழுசா போடணும், தண்ணில போட்டு கழுவி.. வர மிளகாய், மஞ்சளை தனித் தனியா நல்லா அம்மியில் வச்சு நைஸா அரைச்சு.. உப்பு எல்லாம் சேர்த்து கலந்து சேர்த்து வச்சு தடவி கலந்து... பூசுங்கப்பா நம்ம செல்லங்களுக்கு (கறி மேலதான்).

How to cook Nattukozhi Kuzhambu see this viral video

ஆச்சா.. ரைட்டு இப்ப இட்லி தட்டை எடுத்து வெள்ளை வேட்டித் துணியை எடுத்து இறுக்க கட்டி அதை பெரிய சட்டி மேல வச்சு (அடுப்ப பத்த வச்சாச்சுல்லயா.. ) மஞ்சள் பூசி முழுக் கோழிகளையும் தூக்கி அதுல வச்சு மூடிர வேண்டியதுதான்.

இந்தப் பக்கம் வாங்கண்ணே.. இப்பஅரைச்ச மஞ்சள் சாந்து, மிளகாய் சாந்து எல்லாம் கலந்து மசாலா ரெடியாய்ருச்சு.. சட்டியில் வெந்துக்கிட்டிருந்த கோழிக் கறியை தூக்கியாங்கய்யா.. அடுத்து பெரிய வாணலியில் செக்கு நல்லெண்ணெய்யை ஊத்தி, பட்ட மிளகாயைப் போட்டு நல்லா வதக்கி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நல்லா வதக்கி, இஞ்சி பூண்டு சேர்த்து, கல் உப்பைக் கலந்து .. ஆ.. செல்லங்கள் வந்து விட்டனவா.. ஏற்கனவே வேக வைத்த முழு நாட்டுக் கோழியைத் தூக்கி வந்து மெல்ல மெல்ல வானலியில் போட்டு நல்லா வதக்குங்கய்யா... மெதுவா (கோழிக்கு வலிக்காம பொறுக்க புரட்டிப் போடுங்க)

எல்லாம் ஆச்சு.. சூப்பரான, சுவையான நாட்டுக் கோழி ரெடி.. முழு நாட்டுக் கோழியை எடுத்து தட்டு நிறைய சோறைப் போட்டு சூடா குழம்பை ஊத்தி.. நல்லா குழைச்சு வச்சு அடிச்சு .. கடிச்சு சாப்பிட்டா.. நல்லா வெந்துருக்காண்ணே.. சாப்புடுண்ணே சாப்புடுண்ணே.. ஆஹாஹாஹா... !

English summary
How to cook Nattukozhi Kuzhambu? see this viral video which is rocking Whats App.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X