சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பான் கார்டை தொலைச்சுட்டீங்களா.. 50ரூபாயில் வாங்கிடலாம்.. டூப்ளிகேட் பான்கார்டு பெறுவது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: உங்களின் பான் கார்டை தொலைச்சுட்டீங்களா கவலைப்பட வேண்டாம் 50 ரூபாயில் வாங்கிடலாம்.. டூப்ளிகேட் பான்கார்டு பெறுவது எப்படி? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை ஒரு முக்கியமான நிதி ஆவணம் ஆகும். வங்கிக் கணக்கு துவங்க, உங்கள் வங்கி கணக்கில் பெரிய அளவில் பணத்தை செலுத்துவது (ரூ .50,000 க்கு மேல்) போன்ற பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம் ஆகும்.

எனவே ஒரு வேளை உங்கள் பான் கார்டை தொலைத்துவிட்டால் உங்களால் நிதி தொடர்பான எந்த பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வது கடினம் ஆகிவிடும். அப்படி சூழ்நிலையில் தொலைந்து போன பான் கார்டை பெறுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். NSDL e-gov மற்றும் e-Filing ஆகிய தளங்களில் மட்டுமே பான் கார்டுக்குவிண்ணப்பிக்க முடியும். என்.எஸ்.டி.எல் மின்-ஆளுமை உள்கட்டமைப்பு மற்றும் யு.டி.ஐ உள்கட்டமைப்பு தொழில்நுட்ப சேவைகள் ஆகிய இரண்டு நிறுவனங்களை மட்டுமே மத்திய அரசு நியமித்துள்ளது.

ரிபிரிண்ட் பான் கார்டு

ரிபிரிண்ட் பான் கார்டு

சரி பான்கார்டு தொலைந்து போனால் எப்படி பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் https://www.tin-nsdl.com/ என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் ஹோம்பேஜில் 'Reprint of PAN Card'. என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். ஒருவேளை அந்த லிங்க் வரவில்லை என்றால் Services' என்ற ஆப்சனை கிளிக் செய்தால் வரும் வரும் பான் என் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அப்படி செய்தால் 'Reprint of PAN Card'. என்ற ஆப்சன் வந்துவிடும்.

ஆதார் தகவல்கள்

ஆதார் தகவல்கள்

அப்படி செய்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் புதிய விண்டோ திறக்கும். அதில் உங்கள் பான் நம்பர், ஆதார் நம்பர், உங்கள் பிறந்த எண் ஆகியவற்றை டைப் செய்து கடைசியில் உள்ள டிக் பாக்ஸை டிக் செய்ய வேண்டும். அந்த டிக் பாக்ஸில் கட்டாயம் கிளிக் செய்தாக வேண்டும். அப்படி செய்து உங்கள் ஆதார் தகவல் தான் பான் கார்டில் இடம் பெறும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சப்மிட் தரணும்

சப்மிட் தரணும்

அதன்பிறகு கேப்சா கோட் அதாவது குறியீட்டு எண்கள் (captcha code) வரும். இதை டைப் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். அப்படி செய்த பின்னர் வரும் விண்டோவில் உங்களை பற்றி தனிபட்ட விவரங்கள் காண்பிக்கும்.

10 நிமிடத்தில்

10 நிமிடத்தில்

அதன்பிறகு ஒன் டைம் பாஸ்வேடு (ஒடிபி) எப்படி வர வேண்டும் என்பதை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும். அதாவது பான் கார்டை முதல் முதலாக நீங்கள் வாங்கிய போது குறிப்பிட்ட மொபைல் நம்பருக்கா அல்லது இமெயிலுக்கா அல்லது இரண்டுக்குமா என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒடிபி அனுப்பி வைக்கப்படும். 10 நிமிடத்துக்குள் அந்த ஒடிபியை நீங்கள் அதில் டைப் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.

50 கட்டணம்

50 கட்டணம்

அதன்பிறகு பணம் செலுத்த வேண்டிய பகுதிக்கு சென்றுவிடும் ( payment gateway). அப்போது ரிப்பரஸ் பண்ணிவிடக்கூடாது. பேக் அல்லது எஸ்கேப் கொடுத்துவிடக்கூடாது. காத்திருந்தால் சில நொடிகளில் வந்துவிடும். அப்படியே வரிகள் உள்பட 50 ரூபாயை செலுத்த வேண்டும். உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவே அந்த 50 ரூபாயை வாங்குகிறார்கள். ஒருவேளை வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு என்றால் ரூ959ஐ செலுத்த வேண்டியது வரும்.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

ஒருமுறை உங்கள் பேமண்ட் சரியாக முடிந்துவிட்டால் டிரான்ஸ்சாக்சன் சக்ஸஸ்புல் என்று உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரினில் வந்துவிடும். அதன்பிறகு உங்களுக்கு அதற்கான உறுதி எண்கள் (acknowledgement number) உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் ஆக வந்துவிடும். அந்த எஸ்எம்எஸ்சிலேயே இ பான்கார்டை டவுன்லோடு செய்வதற்கான லிங்கும் வந்துவிடும். பிறகென்னா அழகாய் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அரசும் விரைவில் உங்கள் டுப்ளிகேட் பான் கார்டை அனுப்பிவைத்துவிடும்

English summary
if you last pan card, yuo can get duplicate PAN card online, easy way here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X