சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? டாக்டர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பாரம்பரிய மருத்துவர் டாக்டர் வீரபாபு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில கொரோனா பாதிப்பை தடுக்க கபசுர குடிநீர் , மூலிகை தேநீர் பருகலாம் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறி வருகின்ன்றனர்.

இந்நிலையில் மூலிகை தேநீரை பருகி தொடர்ந்து பருகி கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு வைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு

பாரம்பரிய முறை

பாரம்பரிய முறை

இது தொடர்பாக சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் வீரபாபு கூறுகையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சைகளும் மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது அவர்களை நோய் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பெரிதும் உதவுகிறது.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

கொரோனா போன்ற வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில மூலிகை பானங்கள் உதவுகின்றன அந்த வகையில் கபசுர குடிநீருடன் மூலிகை தேநீரை பருகி வருதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மூலிகை தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும்.

எப்படி தயாரிப்பது

எப்படி தயாரிப்பது

சுக்கு 100 கிராம். அதிமதுரம் 100 கிராம். சிற்றரத்தை 30 கிராம். கடுக்காய் தோல் 30 கிராம், மஞ்சள் 10 கிராம், திப்பிலி 5 கிராம். ஒமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், மிளகு 5 கிராம். எடுத்துக் கொண்டு அவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை பொடியை கலது நன்கு காய்ச்சி 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

எவ்வளவு பருகலாம்

எவ்வளவு பருகலாம்

பின்னர் அதனை ஆறவைத்து பருகலாம். இந்த மூலிகை தேநீரை பெரியவர்கள் 100 மில்லியும். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 மில்லியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் தொடர்ந்து பருகுதல் அவசியம்.

Recommended Video

    ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை - இந்தியா காட்டம்
    கருப்படி சேர்த்து பருகலாம்

    கருப்படி சேர்த்து பருகலாம்

    மூலிகை தேநீரைக் கொதிக்க வைக்கும் போது கற்பூரவல்லி, புதினா, எலுமிச்சை, இஞ்சி சேர்த்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் கருப்பட்டி, நாட்டுக்கரை சேர்த்து இந்த தேநீரை பருகலாம்" இவ்வாறு கூறினார்.

    English summary
    we can Make Homemade Herbal Tea That Controlling the covid 19: sidha Doctor veerababu explain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X