சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

க்யூ.ஆர்.கோடு முறை.. பேருந்தில் பயணிக்க கையில் காசு தேவையில்லை.. எம்டிசி விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: எம்டிசி பேருந்துகளில் சோதனை முறையில் க்யூ.ஆர்.கோடு மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி பயணி- நடத்துனர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எம்டிசி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

how to pay digital payments while traveling bus: mtc explain

இதுகுறித்து எம்டிசி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

படிநிலை 1: பயணி தான் செல்ல வேண்டிய இடத்திற்கான பயண கட்டணம் குறித்து
கேட்பார்.

படிநிலை-2: நடத்துனர் கட்டணத்தை தெரிவிப்பார்.

படிநிலை-3: பயணி பணம் செலுத்தும்போது பேருந்தின் உட்புறம் ஒட்டப்பட்டிருக்கும் 'க்யூ.ஆர்.கோட்'டை ஸ்கேன் செய்து, நடத்துனர் தெரிவித்த கட்டணத்தை செயலி மூலம் செலுத்துவார்.

படிநிலை-4: பணம் செலுத்தப்பட்டவுடன் பயணிக்கு அவரது செயலி மூலம் பரிவர்த்தனைகான முகவரி, பணம், பஸ் எண், தேதி மற்றும் நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும்.

படிநிலை-5: பயணி பணம் செலுத்தியவுடன், அவர் செலுத்திய கட்டணம் நடத்துனர் இருக்கை அருகே பொருத்தப்பட்ட ஸ்பீக்கரில் தெரிவிக்கப்படும். பிறகு நடத்துனர் பயணி பணம் செலுத்திய விவரம் பயணியின் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்சை சரிபார்த்து பயணசீட்டு வழங்குவார்.

படிநிலை-6: மேலும் நடத்துனரிடம் உள்ள கைபேசியில் வரும் எஸ்எம்எஸ்சை பார்த்து தான் வழங்கிய பணச்சீட்டு சரிதானா என்பதை சரிபார்த்து கொள்வார்.

படிநிலை-7: நடத்துனர் அந்தந்த ஸ்டேஜ்க்கு உண்டான அனைத்து பயணசீட்டை வழங்கிய பின்னர் வழக்கம்போல 'டிஆர்'ல் பயணசீட்டு எண் குறிக்கும் போது, யூபிஐ செயலி மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பயணசீட்டு விவரத்தை பட்டியலில் பூர்த்தி செய்வார்.

ஹேப்பி நியூஸ்... 5 மாநிலங்களில் துளிர்க்க ஆரம்பித்தது பொருளாதாரம்.. லிஸ்ட்டில் தமிழ்நாடும் இருக்கு! ஹேப்பி நியூஸ்... 5 மாநிலங்களில் துளிர்க்க ஆரம்பித்தது பொருளாதாரம்.. லிஸ்ட்டில் தமிழ்நாடும் இருக்கு!

Recommended Video

    தமிழக பேருந்துகளில் இனி Paytm மூலம் டிக்கெட் வாங்கலாம்

    படிநிலை-8: ஒவ்வொரு ட்ரிப் முடிவின் போது க்யூ.ஆர்.கோடு செயலி மூலம் பயணசீட்டு விற்கப்பட்ட கட்டண விவரத்தை நடத்துனர் 'டிஆர்'ல் சமன் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English summary
    you pay digital payments while traveling govt bus: mtc explain the full details
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X