சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்.. உங்கள் பிஎப் பணத்தை எப்படி எடுப்பது.. எடுக்கும் போது என்னென்ன பிரச்சனைகள் வரும்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிய நிலையில் மாத சம்பளம் வாங்கும் பலர் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் தவித்து வருகிறார்கள். இதனால் பல நிறுவனங்கள் சம்பளம் அளிக்கவில்லை. சில நிறுவனங்கள் குறைவான சம்பளம் அளித்தன. சில நிறுவனங்கள் உங்கள் சேவை தேவையில்லை. வீட்டுக்கு செல்லுங்கள் என வேலையை விட்டே தூக்கிவிட்டன.

இதனால் வேலையின்றி தவிக்கும் மாத சம்பள தொழிலாளர்கள் தற்போதைய அவசர அவசிய சூழலில் நிதி தேவைப்பட்டால், ஏதாவது அவர்களுடைய வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணமாக குறிப்பிட்ட அளவு பணத்தை( 'பிஎப்'பிலிருந்து) எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

பொதுவாக பிஎப் முன்பணம் பொதுவாக கல்வி, வீடு கட்டுதல் அல்லது மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வழங்கப்படும். ஆனால் பணத்தேவைக்கு கோவிட் -19ஐ ஒரு காரணமாகக் கூறி தொழிலாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள பிஎப் பணத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் 75 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

8லட்சம் பேர்

8லட்சம் பேர்

இதன்படி ஊரடங்கு உத்தவை சமாளிப்பதற்காக மக்கள் 3200 கோடி ரூபாய் வரை இதுவரை செலவுக்காக எடுத்துள்ளனர். இந்த லாக்டவுன் சூழ் நிலையில் சுமார் 8லட்சத்து 20 ஆயிரம் பேர் பிஃப் கணக்கில் இருந்து 3200 கோடி ரூபாய் பணம் எடுத்துள்ளார்கள். சரி எப்படி உங்கள் பிஃஎப் பணத்தை ஈபிஎப்ஓ கணக்கில் இருந்து எடுப்பது என்பதை இப்போது பார்ப்போம். ஈபிஎஃப்பில் பணத்தை திரும்ப பெறுவது குறித்து எளிய கணக்கு ஒன்றை இப்போது பார்ப்போம்.

உங்கள் கணக்கில் இருந்து

உங்கள் கணக்கில் இருந்து

உங்கள் கடைசியாக வரையப்பட்ட அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து (டிஏ), மாதத்திற்கு ரூ .30,000 கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்துடன் உங்கள் கணக்கில் ஈபிஎஃப் இருப்பு ரூ .3 லட்சம் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் திரும்பப் பெற தகுதியுள்ள பணத்தின் அளவு மூன்று மாத அடிப்படை சம்பளம் + டிஏ, அதாவது ரூ .90,000க்கு குறைவாக இருக்க வேண்டும். அத்துடன் லது ஈபிஎஃப் நிலுவைத் தொகையில் 75 சதவீதம், அதாவது ரூ .2,25,000க்கு (ரூ. 3 லட்சத்தில் 75 சதவீதம்) குறைவாக இருக்க வேண்டும். எனவே அந்த அடிப்படையில் பார்த்தால் உங்கள் ஈபிஎஃப் கணக்கிலிருந்து ரூ .90,000 திரும்பப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
தொற்றுநோய் பரவி உள்ளதால் நீங்கள் திரும்பப் பெற்ற தொகையை உங்கள் ஈபிஎஃப் கணக்கில் திருப்பித் தரவோ அல்லது நிரப்பவோ தேவையில்லை.

பணத்தை தடுக்க என்ன தகுதி

பணத்தை தடுக்க என்ன தகுதி

ஆன்லைனில் உரிமைகோரலுக்கு விண்ணப்பிக்க, ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
a) ஈபிஎஃப் உறுப்பினரின் யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) ஆக்டிவேசனில் இருக்க வேண்டும்
b) ஆதார் சரிபார்க்கப்பட்டு UAN உடன் இணைக்கப்பட வேண்டும்
c) IFSC குறியீட்டைக் கொண்ட EPF உறுப்பினரின் வங்கிக் கணக்கு UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மற்றபடி பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (ஈ.பி.எஃப்.ஓ) , எந்தவொரு சான்றிதழும் ஆவணங்களும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

பணத்தை எடுப்பது எப்படி

பணத்தை எடுப்பது எப்படி

படி 1: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளத்திற்கு செல்லுங்கள்
படி 2: உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை செலுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்
படி 3: ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று select claim என்பதை கிளிக் செய்து (உரிமைகோரலைத்)தேர்ந்தெடுக்க வேண்டும் (படிவம் -31, 19,10 சி மற்றும் 10 டி)
படி 4: பெயர், பிறந்த தேதி மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற அனைத்து விவரங்களுடனும் ஒரு புதிய வலைப்பக்கம் உங்கள் திரையில் தோன்றும். வலைப்பக்கம் உங்கள் வங்கிக் கணக்கையும் காண்பிக்கும். உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை நீங்கள் அதில் பதிவிட்டு கிளிக் செய்யும் உங்கள் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், அதில் இந்த கணக்குதானா என்பதை உறுதி அளிக்கும்படி ('Certificate of undertaking'.) கேட்கும். அதை ஒகே கொடுத்து உறுதி செய்ய வேண்டும்.

பணம் எவ்வளவு வேணடும்

பணம் எவ்வளவு வேணடும்

படி 5: உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்கள் சரிபார்க்கப்பட்டதும், ('Proceed for online claim') 'ஆன்லைன் உரிமைகோரலுக்கு தொடரவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 6: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நீங்கள் PF advance ('பி.எஃப் அட்வான்ஸ்) (படிவம் 31)' ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 7: பணம் எந்த நோக்கத்திற்காக வேண்டும் என்பதை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'Outbreak of pandemic (COVID-19)' ( 'தொற்றுநோய் பரவல் (கோவிட் 19))' என நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 8: உங்களுக்கு எவ்வளவு தொகை தேவையோ அதை டைப் செய்துவிட்டு ஸ்கேன் செய்யப்பட்ட காசோலையை பதிவேற்றி உங்கள் முகவரியை அளிக்கவும்.
படி 9: ஆதார் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
படி 10: எஸ்எம்எஸ் வழியாக நீங்கள் பெற்ற OTP ஐ அதில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு OTP வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், பணம் வேண்டும் என்ற உங்கள் உரிமைகோரல் கோரிக்கையும் (the claim request will also be submitted ) ஏற்றுக்கொள்ளப்படும்.

பிஎப் கணக்கில் பெயர் பிரச்சனை

பிஎப் கணக்கில் பெயர் பிரச்சனை

ஆனால் இதற்கு நீங்கள் அளிக்கும் விவரங்கள் பொருந்த வேண்டும் மற்றும் உங்கள் உரிமைகோரலை EPFO ஏற்றுக்கொண்டாக வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இல்லாவிட்டால் பணம் வராது. அதற்கு கீழ்க்கண்ட தவறுகள் காரணமாக இருக்கும். ஒன்று உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பெயரும், உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் நீங்கள் பான் எண் சமர்பிக்கும் அளவுக்கு (50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்தால்) பணம் எடுப்பதாக இருந்தால் உங்கள் பான் எண் கணக்கில் உள்ள உங்கள் பெயரும் ஆதாரில் உள்ள பெயரும், பிஎப் கணக்கில் உள்ள பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டாம். உங்கள் பெயரில் குழப்பம் வரக்கூடாது அவ்வளவுதான்.

English summary
How to withdraw from EPF, Eligibility to apply for withdrawal, How to check the status of the claim, details here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X