சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய அளவில் பேச்சு.. ஆடிப்போன டிவிட்டர்.. விஜய் ஒரு டிவிட்தான் போட்டாரு.. அதுக்கே இவ்வளவு பவரா!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் செய்த ஒரே ஒரு டிவிட் இணையம் முழுக்க பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. ஷேர் , லைக்ஸ் தாண்டி இதுக்கு பின் வேறு ஒரு விஷயமும் இருக்கிறது.

நடிகர் விஜய் டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலானது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை பின்பற்றி விஜய் தனது வீட்டில் செடி நாட்டார். மாஸ்டர் பட லுக்கில் மாஸாக விஜய் செடி நட்ட போட்டோ இணையம் முழுக்க பலரை கவர்ந்து இருக்கிறது.

பசுமை மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்காக..உங்களை பின்பற்றி செடி நடுகிறேன் என்று விஜய் மகேஷ் பாபுவை டேக் செய்து இருந்தார். சாதரணமாகவே விஜய் செய்யும் டிவிட்கள் பெரிய அளவில் வைரலாகும். இந்த நிலையில் விஜயின் இந்த டிவிட் மரண மாஸ் ரீச் ஆகியுள்ளது.

கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி! கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி!

ஹிட்

ஹிட்

நடிகர் விஜய் செய்த இந்த டிவிட் மொத்தம் 111.8 ஆயிரம் ரீ டிவிட் ஆகியுள்ளது. அதேபோல் மொத்தம் 327.1 ஆயிரம் லைக்ஸ் வாங்கி உள்ளது. அதோடு 12.3 ஆயிரம் பேர் இதை ஷேர் செய்து கோட் செய்துள்ளனர். நடிகர் விஜய் கடைசியாக நெய்வேலியில் ஷூட்டிங் முடித்து ரசிகர்கள் உடன் வெளியிட்ட புகைப்படம் 133.9 ஆயிரம் ரீ டிவிட் வாங்கியது. அதன்பின் இந்த டிவிட் பெரிய ஹிட் அடித்துள்ளது.

என் பெரிய விஷயம்

என் பெரிய விஷயம்

நடிகர் ஒருவர் டிவிட் செய்து, அது பெரிய அளவில் ஹிட் அடிப்பது பெரிய விஷயம் கிடையாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் விஜய் எதை பற்றி பேசினார் என்பதுதான். விஜய் தனது டிவிட்டில் பசுமை இந்தியா குறித்து பேசினார். பசுமை இந்தியா தொடர்பாக பிரபலங்கள் பதிவு செய்த டிவிட்களில் அதிக ரீ டிவிட் செய்யப்பட்ட, அதிக பேரால் லைக் செய்யப்பட்ட டிவிட் விஜய் செய்ததுதான்.

மேஜிக்

மேஜிக்

தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழி ரசிகர்கள் விஜய்யின் இந்த டிவிட்டை ஷேர் செய்துள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் விஜயின் டிவிட்டை வட இந்திய பிரபலங்கள் வியந்து பாராட்டி இருக்கிறார்கள். ஒரு போட்டோதான் போட்டார்.. அதுக்கே இவ்வளவு ரெஸ்பான்சா.. செம ஃபயர் என்று பாலிவுட் பிரபலங்கள் கூட புகழ்ந்து வருகிறார்கள்.

இயக்கம்

இயக்கம்

இதெல்லாம் போக உண்மையில் கவர்ந்த விஷயம் என்றால் அது விஜயின் ரசிகர்கள் செய்ததுதான். விஜய் ரசிகர்கள் விஜயை பின் தொடர்ந்து தமிழகம் முழுக்க செடி நட தொடங்கி உள்ளனர். பல்வேறு ஊர்களில் செடி நட தொடங்கி உள்ளனர். கேரளாவில் கூட விஜயின் ரசிகர்கள் இப்படி செடி நட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தது என்ன

செய்தது என்ன

இதற்கு முன் இதேபோல் விஜய் ரசிகர்களிடம் , விஜய் சமூக பிரச்சனைகள் குறித்து என்னுடைய ரசிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். விஜய் பிகில் ஆடியோ விழாவில் பேசியதை பின்பற்றி , அவரின் ரசிகர்கள் கீழடி குறித்து டிரெண்ட் செய்தனர். அதேபோல் சென்னையில் பிளக்ஸ் விழுந்து பலியான சுபஸ்ரீ குறித்து JusticeForSubashri என்று ஹேஷ்டேக் டிரெண்ட் செய்தனர்.

இப்போது மீண்டும்

இப்போது மீண்டும்

விஜய் சொன்ன ஒரே வார்த்தையை பின்பற்றி இப்படி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பெரிய டிரெண்டிங்கை நிகழ்த்தினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் மூலம் செடி நடுவது டிரெண்டாகி உள்ளது. விஜய் செய்த ஒரே ஒரு டிவிட்டை பின்பற்றி அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இணையத்தில் தொடர்ந்து டிவிட்களை செய்து வருகிறார்கள்.

வைரல்

வைரல்

ஆக மொத்தம் விஜய் சின்னதாக ஒரு குரல் கொடுத்தால் போதும், அதை பின்பற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வெகு சிலருக்கே இருக்கும் மாஸ் கண்டிப்பாக விஜய்க்கும் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சரியோ தவறோ விஜய் எளிதாக ஒரு விஷயத்தை பேசு பொருளாக்கிவிடுகிறார். சின்ன டிவிட்தான்.. பாஜக தலைவர்கள் கூட விஜய்யை பாராட்டி இருக்கிறார்கள்.

நெய்வேலி

நெய்வேலி

நெய்வேலியில் ஷூட்டிங் இருந்த போது விஜய் வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போதும் விஜய் தனது டிவிட் மூலமே பதிலடி கொடுத்தார். அந்த டிவிட்டும் இணையம் முழுக்க வைரலானது. எனவே விஜய்க்கு இணையத்தில் பாலிவுட் ஹீரோக்களுக்கு கூட இல்லாத மாஸ் இருக்கிறது. இதை அவர் கண்டிப்பாக ஆக்கபூர்வமாக பயன்படுத்தவார்.. எதிர்காலத்தில் விஜய் இதை தனது அரசியல் கருத்துக்களை தெரிவிக்கவும் பயன்படுத்த வாய்ப்புள்ள்ளது.

English summary
How Vijay tweet on plantation creates a movement in twitter and whole social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X