சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு!

திமுக தலைவர் ஸ்டாலினின் 100 நாட்கள் எப்படி கடந்தன?

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: 2-வது திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 100 நாட்கள் எப்படி இருந்தது?

    கட்சியின் தலைவர் பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் ஏகப்பட்ட விமர்சனங்கள், சலசலப்புகள் வரத்தான் செய்தன. அதேபோலதான் ஸ்டாலினுக்கும் எழுந்தது. ஆனால் ஸ்டாலினின் ஆரம்ப கால அரசியல் வாழ்வை நேரடியாக மக்கள் பார்த்ததால் இவர் பொறுப்பேற்றதும் விமர்சனங்கள் வெகுவாக எழவில்லைதான்.

    தற்போது ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்று கொண்டதும், பாஜக உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் வாழ்த்து சொன்னதுதான் சிறப்பு. இந்த 100 நாளில் ஸ்டாலினின் முக்கிய செயல்பாடுகள் என்று பார்த்தால், பதவியேற்ற அன்று அவர் நிகழ்த்திய உரைதான்.

    காவி வர்ண அரசியல்

    காவி வர்ண அரசியல்

    ஏனெனில் அதுவரை திமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்றே தெரியாமல், புரியாமல் இருந்த சமயம். ஸ்டாலின் காவி வர்ண அரசியலை ஒழித்துகட்டுவோம் என்று சொன்னபிறகுதான் அனைவருக்குமே திமுகவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரியவந்தது.

    கருணாநிதி ஸ்டைல்

    கருணாநிதி ஸ்டைல்

    இதனையடுத்து, பிரிந்து போன கட்சியின் மூத்த நிர்வாகிகளை தன்னுடன் இணைத்து கொண்டார். இப்படி பிரிந்தவர்களை சேர்த்து அரவணைத்து போவது கருணாநிதி ஸ்டைல்!! அதனால் இந்த நடவடிக்கையை பார்த்து திமுக தொண்டர்கள் வெகுவாகவே நெகிழ்ந்து விட்டார்கள். அதன்படி முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கட்சியில் மீண்டும் இணைந்தார்கள்.

    மலை - மடு

    மலை - மடு

    அப்போது நமக்கு சிறப்பு பேட்டி அளித்த முல்லைவேந்தன், "அறிவாலயத்தில் அந்த இருக்கையில் ஸ்டாலினை பார்த்தபோது ஒரு நிமிஷம் கலைஞரை பார்ப்பது போலவே இருந்தது. அப்போது நான் பார்த்த தளபதி ஸ்டாலினுக்கும், இப்போது உள்ளவருக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

    கனிமொழி

    கனிமொழி

    எந்த நல்ல விஷயமாக இருந்தாலும், கண்டனமாக இருந்தாலும் அதனை ட்விட்டர் வாயிலாக சரியாக செய்து விருகிறார். ஆனால் ஸ்டாலின் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது. உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வரக் காட்டிய ஆர்வம் கனிமொழி மீது இல்லாமல் போய்விட்டது, அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்றும் சொல்லப்பட்டது.

    அழகிரி விஷயம்

    அழகிரி விஷயம்

    மேலும் சேலம் சிறுமி ராஜலட்சுமிக்கு தனது கண்டனத்தை உடனடியாகவும், உரிய முறையிலும் அவர் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே அழகிரியை கட்சிக்குள் கொண்டு வரவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தது, பிளஸ், மைனஸ் என இருவிதமாக பார்க்கப்பட்டது. ஆனால் வலிமை குறைந்து போயுள்ள அதிமுக ஆட்சியை ஸ்டாலினால் இன்னும் கலைக்க முடியவில்லையே என்ற பொதுவான விமர்சனம் எப்பவுமே இவர் மேல் வைக்கப்பட்டு வருகிறது.

    கூட்டணி குழப்பம்

    கூட்டணி குழப்பம்

    நிறைய விஷயங்களை பொறுமையான அணுகுமுறையுடனும், பக்குவத்துடனும் ஸ்டாலின் கையாண்டாலும் இப்போது எக்கச்சக்கமாக கூட்டணி கட்சிகளிடம் சிக்கி கொண்டுள்ளார். இன்னும் அதிக தூரம் ஸ்டாலின் பயணிக்க வேண்டி இருந்தாலும், இப்போதுள்ள கூட்டணி குழப்பத்தை எப்படி சரி செய்ய போகிறார் என்பதில்தான் எல்லாமே அடங்கி உள்ளது.

    நல்ல முன்னேற்றம்

    நல்ல முன்னேற்றம்

    இது எல்லாவற்றையும் விட முக்கியமாக, 20 தொகுதிகளில் அதிகபட்சமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது ஸ்டாலின் உள்ளார். எப்படி பார்த்தாலும் இந்த 100 நாள் அவருக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை தான் தந்திருக்கிறது!!

    English summary
    MK Stalin celebrates his 100th day as DMK Leader. How was Stalin's activities in these 100 days?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X