சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊராட்சி மன்றத் தலைவரா இருந்து இப்படி இருந்தா எப்படி தேனு? என்னிக்கு வீரம் வரும்?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியலில், தேன்மொழியாக நடிக்கும் ஜாக்குலின் பரிதாபத்தை வரவழைக்கிறார்.

நடிப்பும் நகைச்சுவையும் இவருக்கு இயற்கையாக வந்து சீரியலுக்கு பலம் சேர்த்து இருக்கிறது.

காந்தி நகர் பெண் என்று ஊராட்சி மன்றத் தலைவர் எலக்ஷனில் ஜெயித்து, இதனால், வாழ்க்கை தலைகீழாக மாறுவது இயல்பான கதை.

 சீரியலில் நடிக்கற பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க.. விடிவி.கணேஷ்! சீரியலில் நடிக்கற பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க.. விடிவி.கணேஷ்!

காந்தி நகர்க்காரி

காந்தி நகர்க்காரி

காந்தி நகர்க்காரி என்று மறைமுகமாக தீண்டாமையை சொல்லி இருக்கிறார்கள். இதையே மெயின் கதையாக கொண்டு செல்வார்களா என்று யூகிக்க முடியாமல் கதை போகிறது. பஞ்சாயத்து எலக்ஷனில் ஜெயித்த தலைவரை கல்யாணம் செய்து கொண்டு வந்து வீட்டில் சேர்க்காமல் கொல்லை புறத்து வீட்டில் தங்க வைத்து இருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும்

எல்லா இடத்திலும்

எல்லா வசதியும் எல்லா இடத்திலும் வந்துவிட்ட இந்த காலத்தில், தேன்மொழியும் அப்படித்தான்... வீட்டில் இளவரசி மாதிரி வளர்ந்துவிட்டு. பதவிக்காக ஆசைப்பட்டு கட்டிக்கொண்டவர் வீட்டில் கொல்லை புறத்து வீட்டில் கொசுக்கடியில் வாழ்க்கை. இதில் பட்டினி வேறு..பழி பாவம் வேறு..என்ன கொடுமைடா சாமி!

எப்போது வீரம்

எப்போது வீரம்

கதையில் தேன்மொழிக்கு வீரம் வருவதைத்தான் மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவராக தேன்மொழி எப்போது மாறுவாள்... அதிகாரம், பதவியின் அருமை பெருமை பற்றி எப்போது உணர்வாள்? பஞ்சாயத்து தலைவர் பதவி எத்தனை போற்றுதலுக்கு உரியது ?

உண்மையில் மக்களுக்கும்

உண்மையில் மக்களுக்கும்

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி குறித்த விழிப்புணர்வு, இதை எந்த விதத்தில், அரசு ஊழியர்களுடன் எப்படி கொண்டு போக வேண்டும் என்பது குறித்தெல்லாம் சீரியலில் கொண்டு போனால் மக்களுக்கும் பெரிய விழிப்புணர்வாக இருக்கும்.

இதில் விஏஓ சார் ஊராட்சி மன்றத் தலைவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆரம்பத்தில் சொல்லி இருந்தார்கள். இனியும் சொன்னால் நன்றாக இருக்கும்.

English summary
Vijay TV'sthenmozhi BA Uratchi manra thalaivar Serial, Jacqueline's pity to come out The acting and comedy come naturally to him and add strength to the serial. It is a natural story that the city of Gandhinagar woman won the election of the leader of the panchayat, and thus the reversal of life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X