"பச்சை சிக்னல்" தந்த டெல்லி.. அடுத்த விக்கெட் ரெடி போலயே.. கொளுத்தி போட்ட சசிகலா.. யார் அந்த புள்ளி
சென்னை: சசிகலா சொன்ன அந்த வார்த்தை, அதிமுகவின் கூடாரத்தையே வெலவெலக்க வைத்து வருகிறது.. இதற்கு என்ன காரணம்?
கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தொடர்ந்து இறங்கி வருகிறார்.. மற்றொருபக்கம் எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஆன்மீக பயணங்களில் அவ்வளவாக அரசியல் பேசாத சசிகலா, சமீப காலமாகவே சில அரசியல் விஷயங்களையும், தன்னுடைய நிலைப்பாட்டையும் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்.3
"சக்சஸ்.." பக்கபலமாக வந்த பாஜக நடிகை.. பூரிப்பில் சசிகலா.. டெல்லிக்கு டிக்கெட்?

கல்யாணம்
அந்த வகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை, ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை.. அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது.. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர், யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது.. என்னை கட்சியில் இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்?

எடப்பாடி செயல்பாடுகள்
எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது. அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. பதவிக்காக அதிமுகவில் ஒருசிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்றார்.. சசிகலா இப்படி பேசியதுதான், எடப்பாடி தரப்புக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்கி வருகிறதாம்.

30 எம்எல்ஏக்கள்
சசிகலா ஏன் அப்படி சொன்னார்? எந்த அடிப்படையில் இப்படி பேசினார்? அவர் யாரை சொல்கிறார்? என்பதே அவரது சந்தேகமாக கிளம்பி உள்ளதாம்.. ஏற்கனவே இப்படித்தான் ஒரு பேட்டியின்போதும், சசிகலா பொடி வைத்து பேசியிருந்தார்.. மேலும் 30 எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் சசிகலா தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன.. இந்த விஷயம் அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், அதிமுக அதிருப்தியாளர்களை கண்காணிக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் முயற்சியில் இறங்கவிட்டதாக கூறப்பட்டது.

டெல்டா சீனியர்
ஒருகட்டத்தில் டெல்டாவின் சீனியரும், மாஜி அமைச்சருமான ஒருவரின் பெயரும் பலமாகவே அடிபட்டது.. கடந்த முறை தஞ்சாவூர் சென்றபோது அந்த புள்ளியை நேரிலேயே சசிகலா சந்திக்க திட்டமிட்டதாகவும், அதன்பிறகு, தனக்கு நெருக்கமானவர் ஒருவரை அனுப்பி பேசியதாகவும்கூட தகவல் வெளியானது... அதற்கேற்றாற்போல், அதிமுக தலைமை அலுவலகத்தில் அப்போது நடந்த ஒரு கூட்டத்திலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதும், இதனால் அதிர்ந்து போன அதிமுக மேலிட நிர்வாகிகள், அவரை சமாதானம் செய்து அலுவலகத்துக்கு திரும்ப வர செய்ய முயற்சித்தும் முடியாமல் போன சம்பவமும் இங்கு கவனிக்கத்தக்கது.

முக்கிய புள்ளி
இப்போது வரை அந்த சீனியர் பிடிகொடுக்காமல் நழுவி கொண்டிருப்பதையும் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை.. எப்படியும் அந்த சீனியர் தன் பக்கம் வருவார் என்று சசிகலா தரப்பு முன்பிருந்தே நம்பி கொண்டிருக்கிறது.. இன்றைய தினம் சசிகலா இப்படி சொல்லவும், அந்த நபர் ஒருவேளை இவராகவும் இருக்கலாம் என்கிறார்கள்.. மேலும் பலர், சந்தேகமேயில்லாமல் ஓபிஎஸ்தான் என்றும் சொல்கிறார்கள்..

சசிகலா உறுதி
மேலும் சிலர், இவர்கள் யாருமே இருக்க வாய்ப்பில்லை.. அதிமுக மேலிடத்தில் குழப்பம் விளைவிக்க, ஒரு கலக்கத்தை தருவதற்காக சசிகலா இப்படி கொளுத்தி போட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.. இதனிடையே இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. சசிகலாவின் இன்றைய அரசியல் பேச்சில் ஒரு தெளிவு தெரிகிறது.. ஏதோ ஒரு முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது..

பச்சைகொடி
அநேகமாக டெல்லிக்கு அனுப்பி கொண்டிருந்த தூது ஒர்க் அவுட் ஆகிவிட்ட நிலையில், சசிகலாவுக்கு பச்சை கொடி காட்டப்பட்டிருக்கலாம், அதனால்கூட, சசிகலா மிகுந்த உறுதிப்பிடிப்புடன், அதிமுக பற்றியும், தன்னிடம் பேசி கொண்டிருப்பவர்கள் பற்றியும் தெரிவித்திருக்கலாம் என்கிறார்கள்.. அதுமட்டுல்ல, "அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" என்று சொல்லி எடப்பாடி பழனிசாமியையும் மறைமுகமாக சீண்டி உள்ளார்..

எடப்பாடிக்கு டென்ஷன்
எப்படி பார்த்தாலும், இத்தனை மாத காலமும், தொண்டர்களிடம் மட்டுமே பேசி கொண்டிருப்பதாக சொல்லிவந்த சசிகலா, முதல்முறையாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னுடன் பேசி கொண்டிருப்பதாக ஓபனாகவே போட்டுடைத்துள்ளது, எடப்பாடி தரப்புக்கு டென்ஷனை எகிற வைத்து வருகிறது.. அந்த நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு போட்டுள்ளாராம்.. இதற்காக ஒரு டீமையும் இறக்கி விட்டுள்ளாராம்.. சசிகலா மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில், அதிமுகவில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.