• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'அதிர' வைக்கும் அறிமுக இயக்குனர்.. 'ஒரே' வார்த்தைக்கு குவிந்த பிரபலங்கள்.. வியந்த 'கோலிவுட்'

|

சென்னை: இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.23) சென்னை தியாகராய நகரில் உள்ள சாய் பாபா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

huge celebrities participated in young director sakthi marriage reception

சக்தி எனும் இளம் அறிமுக இயக்குனர் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு சினிமா ஒரு கண் என்றால், சேவை மற்றொரு கண். ஆதரவற்ற, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என தனி அமைப்பே நடத்தி வருகிறார். அதன் மூலம், பல குழந்தைகளின் உணவு, கல்வி செலவு என ஒரு உதவி இயக்குனர் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை தனது விடா முயற்சியில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

huge celebrities participated in young director sakthi marriage reception

இதற்காகவே திரைத்துறையில் உள்ள பல பிரபலங்கள் இவரிடம் நெருக்கமாக உள்ளனர். இந்நிலையில், நேற்று சக்தியின் திருமண வரவேற்பு நடக்க, அதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், P.வாசு, கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, தனஞ்செயன், நடிகர் ஆர்யா, சசிக்குமார், ஆரி, அசோக், நாசர், மாரிமுத்து, அமீத் பார்கவ், ராஜ்கமல், காளி வெங்கட், தனிகை, டேவிட் சாலமன், வில்லன் நடிகர் சம்பத்குமார், சின்னத்திரை நடிகை கௌதமி உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

huge celebrities participated in young director sakthi marriage reception

குறிப்பாக, 'பிக்பாஸ்' மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஆரி, இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பலரும் முண்டியடித்து அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். 'நெடுஞ்சாலை' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, அவரது எந்த படமும் கமர்ஷியல் ரீதியாக சக்ஸஸ் ஆகாத நிலையில், பிக்பாஸ் நான்காவது சீசனில் ஆரி கலந்து கொண்டார்.

அதில், தனி ஆளாய் நின்று, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று டைட்டில் வின்னரானார். இப்போது அவர் என்று சென்றாலும், சுற்றி ஐந்து பேர் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் போல... அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விழாவின் கதாநாயகன், இயக்குனர் சக்தி, தனது புதிய படத்தின் பூஜையை வெகுவிரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
English summary
young director sakthi marriage reception - இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X