சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்நாளே போலீஸ் பிடித்தது.. ஆனால் பைன் வாங்கிட்டு விட்டுட்டாங்க.. ஹைதராபாத் கொலையில் ஷாக்கிங்!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் குறித்த அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் குறித்த அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி உள்ளது. சம்பவ நாளுக்கு முதல்நாள்தான் முகமது ஆரிப்பை போலீசார் லைசன்ஸ் இல்லாத காரணத்திற்காக பிடித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொடூரத்தை செய்தது மொத்தம் நான்கு பேர். முகமது ஆரிப், ஜொள்ளு சிவா , ஜொள்ளு நவீன், சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு என அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாயில் மதுவை ஊற்றிக்கொடுத்து.. பின் டார்ச்சர்.. ஹைதராபாத் மருத்துவர் கொலையில் பரபர வாக்குமூலம்! வாயில் மதுவை ஊற்றிக்கொடுத்து.. பின் டார்ச்சர்.. ஹைதராபாத் மருத்துவர் கொலையில் பரபர வாக்குமூலம்!

லாரி டிரைவர்

லாரி டிரைவர்

இந்த கொலையில் லாரி டிரைவர் முகமது ஆரிப்தான் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறான். 26 வயது கொண்ட இவன்தான் மற்ற மூன்று 20 வயது கொலையாளிகளை வழி நடத்தி இருக்கிறான். இந்த நிலையில் இவனை போலீசார் சம்பவ நாளுக்கு முதல் நாளே, அதாவது செவ்வாய் கிழமையே கைது செய்ய முயன்றுள்ளனர்.

லைசன்ஸ்

லைசன்ஸ்

அந்த லாரி டிரைவர் கடந்த இரண்டு வருடமாக லாரி ஓட்டி இருக்கிறான். ஆனால் இரண்டு வருடமாக அதற்கு அவன் லைசன்ஸ் கூட எடுக்கவில்லை. சம்பவ நாளுக்கு முதல் நாள்தான் போலீஸ் அவனை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவனிடம் லைசன்ஸ் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

என்ன அபராதம்

என்ன அபராதம்

ஆனால் அப்போது அவனுடைய லாரியில் ஸ்டார்ட் செய்வதற்கு ஒரு கேபிள் இல்லாத காரணத்தால் போலீசார் அதை சீஸ் செய்யாமல் அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவனிடம் 1000 ரூபாய் அபராதம் மட்டும் வாங்கிவிட்டு அனுப்பி உள்ளனர். அதன்பின் மெக்கானிக்கை அழைத்து வந்து அவன் லாரியை சரி செய்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளான்.

கொலை

கொலை

அதற்கு மறுநாள்தான் இந்த வன்புணர்வு மற்றும் கொலை நடந்து இருக்கிறது. ஒருவேளை முதல்நாளே போலீசார் அந்த லாரி டிரைவர் ஆரிப்பை கைது செய்து இருந்தால், அங்கு மறுநாள் இவ்வளவு கொடூரமான சம்பவங்கள் நடக்காமல் போய் இருக்கும்.

English summary
Hyderabad Doctor Murder: Police almost arrested the Lorry Driver a day before the horror has taken place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X