சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து வரும் 20ஆம் தேதி, பாஜக சார்பில் தமிழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் துறை அதிகாரிகள் - ஓ.என்.ஜி.சி இடையே இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல், மற்ற 2 ஒப்பந்தங்கள் ஐ ஓ சி நிறுவனத்துடன் கையெழுத்தானது.

நாகை மாதானம், கடலூர் புவனகிரி, தஞ்சை பந்தநல்லூர், திருவாரூர் நன்னிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது. புவனகிரியிலும் நன்னிலத்திலும் 2 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற இரண்டு இடங்களில் 3 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது.

கல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்! கல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்!

தமிழிசை பேட்டி

தமிழிசை பேட்டி

இந்தநிலையில், இலங்கை வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இலங்கை தமிழர்களின் நல் வாழ்விற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்றார்.

அனைத்துமே வளர்ச்சிக்கானது

அனைத்துமே வளர்ச்சிக்கானது

தொடர்ந்து பேசிய அவர்,குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ அனைத்துமே வளர்ச்சிக்கானது. முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

செவி சாய்த்துள்ளது

செவி சாய்த்துள்ளது

முன்னதாக, தபால்துறை தேர்வு தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும் என்று அறிவித்துள்ள மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நியாயமான கருத்துக்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தகுதியில்லை

தகுதியில்லை

மேலும், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியான கட்சி. ஆளும் கட்சியாக இருப்பதற்கு தகுதியில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

English summary
BJP State president Tamilisai Soundararajan said that Hydrocarbon project seminar will be held On the 20th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X