• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆர் யூ ரெடி ஜெனரல்?".. இந்திரா கேட்க.. "எப்பவோ ரெடி ஸ்வீட்டி".. செம தில் மானெக்‌ஷா.. ராயல் சல்யூட்!

Google Oneindia Tamil News

சென்னை: நம் நாட்டின் மிகப்பெரிய ராணுவ வீரர் சாம் மானெக்‌ஷா.. இன்று இவரது நினைவுநாளை நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் நினைவுகூர்வதில் "ஒன்இந்தியா தமிழ்" பெருமிதம் கொள்கிறது..!

கம்பீர நடை - தீர்க்கமான பார்வை - மிடுக்கான தோற்றம் - மேல்நோக்கி முறுக்கிய மீசை - சமயோசித புத்தி - என ஒரு ராணுவ அதிகாரிக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டவர் ஜெனரல் மானக்‌ஷா!!

நாடு சந்தித்த 5 முக்கிய போர்களை சத்தமில்லாத பிரளயத்துடன் நிகழ்த்தி, நம்மை காப்பாற்றியவர் தான் மானெக்‌ஷா..!

 ரொனால்டோவை தொடர்ந்து.. பிரஸ் மீட்டில் மற்றொரு கால்பந்து வீரர் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ! ரொனால்டோவை தொடர்ந்து.. பிரஸ் மீட்டில் மற்றொரு கால்பந்து வீரர் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ!

 உத்தரவுகள்

உத்தரவுகள்

இவர் எப்போ, என்ன அதிரடிகளை கையில் எடுப்பார், என்னென்ன உத்தரவுகளை எப்போது போடுவார் என்று உடன் இருப்பவர்களுக்கே தெரியாது... திடீர் திடீர் என இவர் போரை எதிர்கொள்ளும் திறனும், நுட்பமான யுக்திகளும், சமயோஜிதமும் இவரிடம் நிரம்பி தளும்பியது.. 1962-ல் சீனப்போர் நடந்போது, "கூப்பிடுங்கள் மானெக்‌ஷாவை" என்றார் நேரு..!

குண்டுகள்

குண்டுகள்

ஜப்பானுடன் நடந்த போரில் இவரை 7 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. உடம்பில் 9 குண்டுகள் பாய்ந்தும்கூட, அவர் கையில் இருந்த துப்பாக்கி மட்டும் சீறி கொண்டே இருந்தது.. படுபிஸியாக சண்டை போட்டு கொண்டிருந்தார்... இதை பார்த்த பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி, மிரண்டே போய்விட்டார்.. உடனே தன்னுடைய மிலிட்டரி பதக்கத்தை கழற்றி, அந்த போர்முனையிலேயே மானெக்‌ஷா கழுத்தில் அணிவித்தார்.

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

துணிச்சலுக்கு பெயர் போன இந்திராவே ஒருவரை பார்த்து வியக்கிறார் என்றால் அது மானெக்‌ஷாதான்.. இப்படிப்பட்ட இந்திராவை ஒருவர் "ஸ்வீட்டி" என்றுதான் துணிச்சலுடன் கூப்பிடுகிறார் என்றால் அது மானெக்‌ஷாதான்.. அந்த அளவுக்கு இந்திரா காந்தி இவர் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார்.. ராணுவ விஷயங்களை மானெக்‌ஷாவை கேட்டுதான் அன்றைய காலகட்டங்களில் முன்னெடுத்து கொண்டிருந்தார்.

 ஆர் யூ ரெடி?

ஆர் யூ ரெடி?

இப்படித்தான், 1971-ல் பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டி கொண்டிருந்தது.. பாகிஸ்தானை அடக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து இந்திராவும் காத்திருந்தார்.. உடனே மானெக்‌ஷாவுக்கு போன் அடித்த இந்திரா, "ஜெனரல், ஆர் யூ ரெடி?" என்று கேட்க, "நான் எப்பவோ ரெடி ஸ்வீட்டி" என்று மானெக்‌ஷா சொல்ல, பாகிஸ்தான் கதையை ஒரே வாரத்தில் முடித்தார் மானெக்‌ஷா..!

வங்கதேசம்

வங்கதேசம்

தவித்து கிடந்த மக்களின் சுதந்திர தாகம் தணித்து, பாகிஸ்தானின் ஆணவத்தோலை உரித்தவர்... காஷ்மீரை காப்பாற்றி, வெறும் 13 நாளில் வங்கதேசம் என்ற புதிய நாட்டையே உருவாக்கியவர்தான் மானக்‌ஷா... ஃபீல்டு மார்ஷல்' அந்தஸ்து பெற்றவர்கள் 2 பேர் மட்டும்தான்... ஒருவர் சாம் மானக்‌ஷா... இன்னொருவர் ஜெனரல் கரியப்பா.. இதில் முதலில் இந்த அந்தஸ்தை பெற்றது மானெக்‌ஷாதான்..!

நம்பிக்கை

நம்பிக்கை

மானெக்‌ஷா என்ற தைரியத்தின் ஒளிக்கீற்றில் எத்தனையோ வீர சாதனைகள் அன்று நிகழ்ந்தேறியது... "நம் தேசத்தை காக்க மானக்‌ஷா இருக்கிறாரே, நமக்கென்ன கவலை?" என்று நாட்டு மக்களுக்கு பெருத்த நம்பிக்கை வலுத்து கிடந்தது. ரிடையர் ஆன பிறகு, உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்று இவர் இறுதி காலத்தை கழித்திருக்கலாம்.. ஆனால் நம் குன்னூரில் வந்து தங்கினார்... குன்னூரின் குளுகுளுவும், மக்களின் பாசமும் அவரை கட்டிப்போட்டுவிட்டது.

 உதவிகள்

உதவிகள்

மனைவியுடன் சேர்ந்து ஏழைகளுக்காகவே இலவச ஆஸ்பத்திரி கட்டி உதவினார்.. மானக்‌ஷாவின் மகள்கள் ஷாப்பிங் சென்றால், "அப்பா எப்படி இருக்கிறார்..ம்மா" என்று குன்னூர் மக்கள் அன்போடு விசாரிப்பார்கள். 2008-ல் திடீரென மானெக்‌ஷாவுக்கு மாரடைப்பு வந்துவிட்டது.. டாக்டர்கள் அவரை உயிரை காப்பாற்ற போராடி கொண்டிருந்தபோது, "டோன்ட் வொர்ரி.. நான் நல்லாதான் இருக்கிறேன்" என்று டாக்டர்களுக்கே நம்பிக்கை தந்து, உயிரையும் விட்டார் மானக்‌ஷா.

நீலகிரி

நீலகிரி

இறுதி அஞ்சலிக்கு நீலகிரியே தயாரானது.. இவர் பார்சி இனத்தை சேர்ந்தவர்.. அதனால் இவர்களுக்கென்று தனியாக ஊட்டியில் கல்லறை உள்ளது.. தேசிய கொடி போர்த்தி ராணுவ வாகனத்தில், உடல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது.. இவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் வீடுகளிலும், ரோடுகளிலும் பொதுமக்களும், மாணவர்களும் கண்ணீர் மல்க சல்யூட் அடித்து, விடை தந்து கொண்டிருந்த அந்த நெகிழ்ச்சி தருணத்தை மறக்கவே முடியாது...!

சல்யூட்

சல்யூட்

இந்த மாவீரனை, ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து, இந்திய தாய் கர்வம் கொள்கிறாள்.. இம் மலைப்பிரதேசத்தின் நிசப்தத்தில், அவரது ஆன்மா நித்திரை கொண்டுள்ளது.. அடர்த்தி மிகுந்த வரலாற்றை, அதிர பதிப்பித்து சென்ற ஜெனரல் சாம் மானக்‌ஷா-வுக்கு வீர வணக்கங்கள்!!

English summary
"I am always ready, sweetie", Field Marshal Sam Manekshaw's most memorable General for ever
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X