சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உட்கார வச்சேன், சாப்பாடு கொடுத்தேன், 15 நிமிஷம் டைம் கொடுத்தேன்.. இதுதான் பொன் மாணிக்கவேல் ஸ்டைல்!

பொன்.மாணிக்கவேல் பிரிவு உபச்சார விழாவில் உருக்கமாக பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒய்வு பெறுகிறார் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் .மாணிக்கவேல்- வீடியோ

    சென்னை: "இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்" என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக கூறியுள்ளார்.

    தமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டார் பொன்.மாணிக்கவேல். எத்தனை எத்தனை சிலைகளை மீட்டெடுத்தார் இவர்!!

    குறிப்பாக 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக எடுத்து கொண்டாடினார்களே.. இதைவிட வேறு என்ன சிறப்பு ஐஜி-க்கு இருக்க முடியும்?

    [பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது! ]

     உருக்கம்

    உருக்கம்

    நாளையுடன் இவரது பணி நிறைவடைவதையொட்டி, சென்னையில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பொன். மாணிக்கவேல் தன்னுடன் சக காவலர்களாக பணியாற்றியவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அவரது உருக்கமான பேச்சின் வரிகள்தான் இவை:

     கைது செய்ய வேண்டும்

    கைது செய்ய வேண்டும்

    "ஒரு குற்றம் நடந்துவிட்டால், அந்த பகுதியில் முழுமையாக இறங்கி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், தவறு என்று தெரிந்துவிட்டால் உடனே கோர்ட் அனுமதி பெற்று கைது செய்து விட வேண்டும். இது சம்பந்தமான வழக்குகள், சட்டங்களை எல்லோரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

     அடிக்க கூடாது

    அடிக்க கூடாது

    எப்ஐஆர் போட போலீஸ்காரர்கள் பயப்படவே கூடாது. எப்பவுமே குற்றவாளிகள் வாக்குமூலம் தந்தால் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைச்சிக்கணும். அப்போதான் அது சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். குற்றவாளியை அடிக்கிறதால உண்மையை வரவழைக்க முடியாது.

     சாப்பாடு கொடுத்தேன்

    சாப்பாடு கொடுத்தேன்

    நான் கூட கேஸ் நடத்தினேன். அப்போ குற்றவாளியை கூப்பிட்டு விசாரணை நடத்தும்போது அவருக்கு ஒரு சேர் கொடுத்து உட்கார வச்சேன். நான் சாப்பிட்ட சாப்பாட்டைதான் அவருக்கும் கொடுத்தேன். எனக்கிருக்கும் எல்லா வசதிகளும் அவருக்கும் இருக்கிற மாதிரிதான் பார்த்துக்கிட்டேன். ஆனா ஒரு கேள்வியை கூட நான் கேக்கல.

     ஒப்புக் கொண்டார்

    ஒப்புக் கொண்டார்

    அதுக்கு பதிலா, இதுவரை அவர் செய்த தவறுகளை எல்லாம் அவருக்கு எடுத்து காட்டி, அதுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் சட்டத்தில் கிடைக்கும் என்பதையும் எடுத்து சொல்லி 15 நிமிஷம் டைம் கொடுத்தேன். அப்பறம் அவராகவே என்கிட்ட வந்து, ஒன்னு விடாமல் இதுவரை செய்த தவறுகளை என்னிடம் மளமளவென சொல்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

     இளைஞர்கள்

    இளைஞர்கள்

    போலீஸ்காரர்கள் நினைத்தால் ஒரு குற்றவாளியை ஆறே மாசத்தில திருத்த முடியும். அந்த அளவுக்கு கடமை இருக்கு. என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டு செல்கிறேன்" என்றார் அவர்.

    English summary
    Pon Manickavel says that he is going to hand over the job to young people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X