சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லிமாக எனக்கும் அச்சம் இருக்கிறது.. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து தமிழக அமைச்சர் நிலோபர் கபீல்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முஸ்லிமாக குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. குறித்து அச்சம் இருப்பதாக தமிழக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக ஆதரித்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சட்டத் திருத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது அதிமுகவின் நிலைப்பாடு.

I am Muslim, I Scared on CAA, NRC, says TN Minister Nilofer Kafeel

பல மாநில முதல்வர்களும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அப்படியான ஒரு கருத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அமைச்சர் நிலோபர் கபீல், முஸ்லிம்களிடையே பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. அதில், குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தாது; இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என கூறியிருந்தார்.

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம் ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

தமிழக அமைச்சர் நிலோபர் கபீலின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலோபர் கபீல், நான் ஒரு முஸ்லிம்.. எனக்கும் கூட அச்சம் இருக்கிறது. என்.ஆர்.சி. குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லிம்களின் அச்சம் குறித்து தெரிவித்தேன். என்.ஆர்.சியில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோர்ரிக்கை விடுத்தேன்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுபற்றி எந்த கவலையும் வேண்டாம்; இது குறித்து மாநில அரசு கவனத்தில் கொள்ளும் என உறுதியளித்தார். இது எனக்கு திருப்தியை தந்தது. என் கட்சியை நான் நம்புகிறேன் என்றார்.

English summary
Tamilnadu Minister Nilofer Kafeel said that, I am Muslim, I was Scared on CAA, NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X