சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்தபோது... செய்தியாளர் கேட்ட கேள்வி.. டென்சனான நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நான் இருந்ததே இல்லை என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பதில் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு, நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், "ஏப்ரல் 16ம் தேதி கரூரில் என்னுடைய பிரச்சாரத்தை முடித்தேன்.

i am not in AMMK when the party start: says DMK Speaker nanjil sampath

நான் பிரச்சாரம் செய்ய சென்ற இடங்கள், ஊர்கள், அங்கு நிலவிய நிலவரங்கள், வெற்றி வாய்ப்புகள் எல்லாம் குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலினிடத்தில் தகவல் சொல்லிவிட்டேன். அதை எழுதியும் நான் அவரிடம் கொடுத்து இருக்கிறேன்.

27ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், தமிழ் சங்கத்தில் அந்த நாள் எந்த நாள் என்ற தலைப்பில் உரையாற்றப் போகிறேன். நாளை பயணமாக இருக்கிறேன். அதற்காக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வந்தேன். அவர் என்னை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பாரிஸ் சென்றுவிட்டு வந்து 4 தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய சித்தமாக இருக்கிறேன் என்று ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறேன்" இவ்வாறு கூறினார்.

இதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம் இதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்

அப்போது செய்தியாளர் ஒருவர் அமமுகவில் இருந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கோபமாக பதில் அளித்த நாஞ்சில் சம்பத், ரிப்போர்ட்டரின் பெயரை குறிப்பிட்டு, நான் அமமுகவில் இருக்கவே இல்லையா.. ஏன் இப்படி கேட்குறீர்கள் என்றார். மேலும் "அமமுக தொடங்கும் நாளில் நான் வெளியேறினேன். நான் அமமுகவில் இருக்கவே இல்லை.அந்த சமயத்தில் சசிகலாவை நீக்கியதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து ஒ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிககு எதிராக தமிழகம் முழுவதும் நான் மட்டுமல்ல பலர் குரல் கொடுத்தோம்" என்றார்.

English summary
dmk Speaker nanjil sampath says after met dmk leader stallin, i am not in ammk when the party start
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X