சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் 'ஆயுத உதவி' கேட்டேன்.... வைகோ பரபர தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    புலிகளுக்காக வி.பி.சிங்கிடம் உதவி கேட்டேன்: வைகோ பரபர தகவல்- வீடியோ

    சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் ஆயுத உதவி செய்ய வேண்டும் என தாம் கேட்டதாக மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

    தி இந்து நாளிதழுக்கு வைகோ அளித்த பேட்டி:

    நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேசும் போது வாஜ்பாய் முன்பு ஆற்றிய ஒரு உரையை மேற்கோள்காட்டினேன். வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக இந்திரா காந்தியை துர்காதேவியாக பார்க்கிறேன் என வாஜ்பாய் பேசியிருந்தார்.

    அதே போல தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி கொடுத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உங்களை அன்னை பராசக்தியாக தமிழர்கள் வணங்குவார்கள் என்றேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இந்திரா காந்தி அம்மையார், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகிற தமிழர்கள் அம்மண்ணின் பூர்வகுடிகள் என பிரகடனம் செய்தார்.

    வைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்!வைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்!

    இலங்கையிலும் ராணுவ நடவடிக்கை

    இலங்கையிலும் ராணுவ நடவடிக்கை

    அந்த கூட்டம் முடிந்த பிறகு லாபியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் தமிழீழத்தை உருவாக்கி தாருங்கள் என கேட்டேன். அப்போது ராணுவ நடவடிக்கையை நாம் மேற்கொண்டால் மலையகத் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்; நமக்கும் இலங்கைக்கும் இடையே அவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்றார். அப்படியானால் அனைத்து தமிழர்களையும் ஒரே பக்கம் கொண்டு வரும் வகையில் வியூகம் வகுக்கலாமே என்றேன்.

    இந்திரா காந்தியின் ப்ளான்

    இந்திரா காந்தியின் ப்ளான்

    அதை ஆமோதித்தவாறு அரசுடன் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்குமாறு என்னை அவர் கேட்டுக் கொண்டார். அப்போது அவரது அமைச்சரவை சகாக்கள் அங்கு வர அந்த பேச்சை அப்படியே நாங்கள் நிறுத்திவிட்டோம். அதன் பின்னர் இந்து அலுவலகத்துக்கு சென்றேன். விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்ததுவந்த ஜி.கே. ரெட்டியை அங்கு சந்தித்தேன். அவரிடம், இந்திரா காந்தி தமிழீழத்துக்காக ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறார். போய் சந்தியுங்கள் என்றேன்.

    புலிகளுக்கு ஆயுத உதவி

    புலிகளுக்கு ஆயுத உதவி

    அப்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துவிட்டது. அதற்கு அடுத்து இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்டார். தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை இந்திரா காந்தி வைத்திருந்தார். பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு என்ன என்ன ஆயுதங்கள் தேவை என ஒரு பட்டியலோடு சந்தித்தேன். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் மூலமாக பிரபாகரன் எனக்கு கொடுத்தனுப்பினார். அந்த பட்டியல் இன்னமும் என்னிடம் இருக்கிறது.

    புலிகளுக்கான மருந்துகள் விவகாரத்தில் மர்மம்

    புலிகளுக்கான மருந்துகள் விவகாரத்தில் மர்மம்

    காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் என் மீது பாசம் வைத்திருந்தவர் வி.பி.சிங். அப்போது கூட்டணி ஆட்சி என்பதால் தம்மால் உதவ முடியாது என கூறினார். அதேநேரத்தில் மருந்துகளை அனுப்ப உதவுவதாகவும் கூறியதுடன் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஐ.கே. குஜ்ராலை சந்திக்கவும் சொன்னார். இதையடுத்து ரா மூத்த அதிகாரி ஒருவர் என்னை சந்தித்து தேவையான மருந்துகளின் பட்டியலைப் பெற்றுக் கொன்டார். மொத்தம் ரூ47 லட்சம் மதிப்பிலான மருந்துகளுக்கான பட்டியலைக் கொடுத்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அது அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த காரணத்தை இப்போது நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் அதை பற்றி எழுதுவேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    English summary
    MDMK General Secretary and Rajyasabha elected MP Vaiko said that, I approached then Prime Minister V.P. Singh with a list of weapons for LTTE.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X