சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலை வணக்கம் தமிழகமே!.. மக்களின் நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

காப்போம்

காப்போம்

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு ஆபத்து இருக்காது

ஆட்சிக்கு ஆபத்து இருக்காது

தேசிய அளவில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 92 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதே நேரம், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தப்புமா என்ற சூழலில், 9 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் ஆட்சிக்கு ஆபத்து இருக்காது என்று கூறப்படுகிறது.

2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!! 2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!

கணக்கு தப்பானது?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்படும் என பிரச்சாரம் செய்த ஸ்டாலினின், கணக்கு தவறிவிட்டது என்றே சொல்லலாம். வரும் நாட்களில், ஸ்டாலின் வியூகம் பலிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சாயம் பூச விரும்பவில்லை

சாயம் பூச விரும்பவில்லை

நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள் என்றும், மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிருதி இராணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும், இன்று தான் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன, வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்றும் ராகுல்காந்தி பதிலளித்தார்.

எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி! எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!

English summary
Stalin tweeted that We hope and wish he will provide a progressive government based on the principles of democracy and inclusivity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X