சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடி திருப்பம்.. திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன்.. திமுக சரவணன் ஆணையத்திற்கு கடிதம்!

திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை போட்டு இருந்தார். இது ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து என்று சரவணன் வழக்கு தொடுத்தார்.

பொள்ளாச்சி.. கதறலும், அழுகுரலும் வலியைத் தருகிறது.. கடும் தண்டனை கொடுங்கள்.. சீமான் ஆவேசம் பொள்ளாச்சி.. கதறலும், அழுகுரலும் வலியைத் தருகிறது.. கடும் தண்டனை கொடுங்கள்.. சீமான் ஆவேசம்

தீர்ப்பு நிலுவை

தீர்ப்பு நிலுவை

அதனால் அந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்பிற்காக நிலுவையில் இருக்கிறது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இதனால் தற்போது திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

மனுதாக்கல்

மனுதாக்கல்

இந்த நிலையில் இன்று காலை, இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் சரவணன் மனுதாக்கல் செய்தார். அவரின் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தற்போது புதிய திருப்பமாக திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன் என்று திமுக சரவணன் தெரிவித்துள்ளார்.

என்ன கடிதம்

என்ன கடிதம்

அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் எழுதிய கடிதத்தில், திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. தொகுதி நலன் கருதி வழக்கை திரும்ப பெறுகிறேன். எனது வழக்கறிஞர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துவிட்டார்.

உடனே வேண்டும்

உடனே வேண்டும்

வழக்கு காரணமாக தேர்தல் தள்ளிப்போக கூடாது. வழக்கு காரணமாக தேர்தல் நடத்த கூடாது என்று எங்கும் நீதிமன்றம் கூறவில்லை. இருந்தாலும் என் வழக்கை திரும்ப பெறுகிறேன். அதனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்று சரவணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
I decide to withdraw my case against Thiruparangkundram election says DMK Saravanan as the news twist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X