சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படித்தான்.. எங்களுக்கு இந்தி தெரியாது.. இமிகிரேஷன் மறுக்கப்பட்ட தமிழருக்காக கனிமொழி குரல்!

மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு கனிமொழி ஆதரவு- வீடியோ

    சென்னை: மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் இமிகிரேஷன் மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநில மக்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இரண்டு நாட்களுக்கு முன் நியூயார்க் செல்வதற்காக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த குடியேற்றப் பிரிவு அதிகாரி அவரிடம் இந்தியில் பேசி இருக்கிறார். ஆனால் இந்தி தெரியாத, ஆப்ரகாம் சாமுவேல் அந்த அதிகாரியை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு போ

    தமிழ்நாட்டிற்கு போ

    இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மொழி வெறி பிடித்த அதிகாரி, இந்தி தெரியாது என்றால் தமிழ்நாட்டிற்கே போ, என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிவிட் செய்திருக்கும் ஆப்ரகாம் சாமுவேல், பிரதமர் மோடியிடம் புகாரும் அளித்துள்ளார்.

    கனிமொழி கண்டனம்

    இதற்கு தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில் ''நான் ஓர் இந்திய பெண்..நான் இந்தி பேச மாட்டேன்'' என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார். ''நாங்க இப்படித்தான் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று பணியில் கனிமொழி கெத்தாக டிவிட் செய்துள்ளார்.

    வரவேற்பு

    கனிமொழியின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. கனிமொழி கொடுத்தது நெத்தியடி பதில் என்று பலர் கூறியுள்ளனர். இவர், எங்கே அப்பாவி மக்களின் குரல்வளைகள் நெறிக்கப்படுகிறதோ அங்கே ஓங்கி ஒலித்து அதிகார வர்க்கத்தை அலறவிடும் அக்கா கனிமொழியின் குரல்'' என்றுள்ளார் என்றுள்ளார்.

    English summary
    I am an Indian and I do NOT speak Hindi says Kanimozhi on the support of Tamil Student who has denied immigration for not knowing Hindi in Mumbai airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X