சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 10-15% ஓட்டு வாங்கி நான் தோற்கவிரும்பவில்லை என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்ததால் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?

மருத்துவர்கள் அட்வைஸ்

மருத்துவர்கள் அட்வைஸ்

குறிப்பாக தமது உடல்நிலை குறித்து மனம் திறந்து மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய முடியும் என்று கூறி முதல் அதிர்ச்சியை கொடுத்தாராம் ரஜினிகாந்த்.

இப்பவே கெட்ட பெயர்

இப்பவே கெட்ட பெயர்

அடுத்ததாக அரசியல் கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவது பற்றி தன்னுடைய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அப்போதுதான், மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர்; எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறார்.

ஓட்டு வாங்கி பயனில்லையே..

ஓட்டு வாங்கி பயனில்லையே..

இதன்பின்னர் அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்த பயனுமே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன்.

ஜெயிக்கனும்னா போகனும்..

ஜெயிக்கனும்னா போகனும்..

அதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிற போது எப்படி கட்சியை தொடங்குவது? என கேள்வி கேட்டிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த அடுத்தடுத்த லைவ் அதிர்ச்சி வைத்தியங்களால் ஆடிப் போய்விட்டனராம் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

ஆக ஸ்ட்ரெயிட்டா ஆட்சி?

English summary
Actor Rajinikanth told to his Mandram Dist. Secretaries that he don't want Defeats in Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X