சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு மத்திய அமைச்சர் பதவியா? யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்!

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை, என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை, என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இந்த கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வேட்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.

I never thought about getting a ministerial berth says O P Raveendranath

கடைசியாக நடந்த வேலூர் தேர்தலிலும் அதிக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா, பாஜக அவருக்கு அமைச்சர் பதவி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது ஓ.பி. ரவீந்திரநாத் பேட்டி அளித்துள்ளார். அதில், மத்திய அமைச்சரவையில் நான் இருப்பேனா என்று சொல்ல முடியாது. அது குறித்து நான் யோசிக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை.

கட்சி என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். கட்சி தலைமையின் முடிவுதான் இறுதியானது.

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன். அதில் நான் தெரிவித்தது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

என்னுடைய கருத்தை சிலர் அரசியலாக்க முயல்கிறார்கள். என்னுடைய நாடாளுமன்ற பேச்சை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள், என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

English summary
I never thought about getting a ministerial berth says AIADMK MP O P Raveendranath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X