சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவி சண்முகம் கருத்தை வரவேற்கிறேன்.. மருத்துவ செலவுக்கு சசிகலாதான் காரணம்.. ஜெயக்குமார் பரபரப்பு!

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அளித்த குற்றச்சாட்டு சரிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அளித்த குற்றச்சாட்டு சரிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்தார். அதில், ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. அவருக்கு தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? இதற்கு பின்னணி யார் என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதுகுறித்து தற்போது அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிவி சண்முகம் கருத்திற்கு ஜெயக்குமார் வரவேற்பு அளித்துள்ளார்.

ஜெ. மரண விசாரணை முடிவு

ஜெ. மரண விசாரணை முடிவு

ஜெயக்குமார் தனது பேட்டியில், ஜெ. மரண விசாரணையை யாரும் திசை திருப்ப நினைக்கவில்லை. விசாரணை ஆணையம் ஜெ. மரணம் குறித்து விசாரித்து வருகிறது. அமைச்சர் என்ற அடிப்படையில் சி.வி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தவறு இல்லை.

சி.வி சண்முகம் கருத்து என்ன

சி.வி சண்முகம் கருத்து என்ன

சி.வி சண்முகம் கருத்தை வரவேற்கிறேன். சி.வி சண்முகம் கருத்தை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். சி.வி சண்முகம் சிறப்பு கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். சி.வி சண்முகம் கருத்தை வைத்தும் ஆணையம் விசாரிக்க வேண்டும்.

அதிமுக பிளவு

அதிமுக பிளவு

அதிமுகவில் பிளவு ஏற்படுத்த முடியாது- அமைச்சர் ஜெயக்குமார். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் . எங்களை யாராலும் பிரிக்க முடியாது. சிவி சண்முகம் சரியாகத்தான் பேசி இருக்கிறார். அவரின் கருத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

சசிகலா குடும்பம்

சசிகலா குடும்பம்

சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதால்தான் ரூ.1 கோடி பில் வந்தது. சசிகலா குடும்பம் பல அறைகளை வாடகைக்கு எடுத்து சாப்பிட்டதற்கு தான் ஒன்றரை கோடி செலவு ஆனது. அது ஜெயலலிதாவின் உணவு செலவு அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் யாரும் மருத்துவமனையில் சாப்பிடவில்லை. நாங்கள் அங்கு தங்கவும் இல்லை. எங்களுக்கும் அங்கு நடந்த செலவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
I stand with CV Shanmugam on Jayalalitha's death investigation says, Minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X