சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி வீட்டில் ரெய்டு.. தமிழிசை பதில் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் இருக்கும் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை

    சென்னை: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி, குறிஞ்சி நகரில் உள்ள கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளதாகவும், அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை என்றும், தெரிவித்தார்.

    I-T Raids Kanimozhi house, Tamilisai Soundararajan react

    இதுகுறித்து தமிழிசை அளித்துள்ள பேட்டி: ஆதாரங்கள் இல்லாமல் யார் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தாது. தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டிலும், ஆதாரங்கள் இல்லாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள்.

    ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை கேட்டு, எனக்கு சிரிப்பதா, என்னவென்று தெரியவில்லை. நான் நேரடியாக வரி கட்டி நேர்மையாக சம்பாதித்துள்ளேன். என்னிடம் கோடி கோடியாக பணம் இருப்பதாக சொல்வதற்கு இதுவும் என்ன தேர்தல் களமா? கனிமொழி வீட்டில் நடந்தது என்றால் தமிழிசை வீட்டிலேயும் ரெய்டு நடைபெற வேண்டுமா? ஏட்டிக்கு போட்டியா இது?

    வருமான வரித்துறை ஏதாவது காரணத்தை வைத்துத்தான் சோதனை நடத்தியிருப்பார்கள். அவர்களிடம் இல்லை என்றால், ஏற்கனவே அவர்களின் கீழே இருக்கும் நிர்வாகிகளிடம் பணம் போய்விட்டது என்றுதான் அர்த்தம். எங்க வீட்டில் பார்த்தியா, அப்ப அவுங்க வீட்டிலேயும் பாரு என்று கூறுவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசுவது மாதிரியாகவா இருக்கிறது.

     எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்?.. கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா? எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்?.. கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா?

    வேண்டுமென்றே வேலூரில் தேர்தலை நிறுத்தியதைபோல தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்தப் பார்க்கிறார்கள் என கனிமொழி கூறியுள்ளார். வேலூரில் ஆதாரம் தெளிவாக கிடைத்திருக்கிறது. துரைமுருகன் மற்றும் அவரது நண்பர் வீடுகளில் கிடைத்த பணத்தை எண்ணுவதற்கே இரவு 11 மணி ஆகியிருக்கிறது. 11 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்து தேர்தல் ரத்து செய்யக்கூடாதா? கனிமொழி இவ்வாறு பேட்டியளிக்க காரணம் என்ன? இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பினார்.

    English summary
    Tamilisai Soundararajan says Income Tax officials may get information on Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X