சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா..? பிரஸை அழைத்து கூறிய நடிகர் ஆனந்த்ராஜ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Actor Anandraj Pressmeet: யாருக்கு ஓட்டு போட்டேன் என பிரஸை அழைத்து கூறிய நடிகர் ஆனந்த்ராஜ்!-

    சென்னை: நடிகர் ஆனந்த்ராஜ் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் மிக தீவிரமாக இருந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் இருந்தார். தேர்தல் என்றாலே அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவை விமர்சித்து பிரச்சாரம் செய்யவதுதான் ஆனந்த்ராஜின் வாடிக்கை.

    ஆனால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு ரொம்பவே அப்செட் ஆனார். ஜெயலலிதாவின் மறைவு யாருக்கு இழப்போ இல்லையோ எனக்கு மிகப்பெரிய இழப்பு என கண்ணீர்விட்டார் ஆனந்த் ராஜ். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியகா இருந்து வருகிறார்.

    தேர்தல் தோல்வியால் 'காண்டு'... பிரேமலதாவை போலவே மக்களுக்கு சாபம் கொடுக்கும் ராமதாஸ் தேர்தல் தோல்வியால் 'காண்டு'... பிரேமலதாவை போலவே மக்களுக்கு சாபம் கொடுக்கும் ராமதாஸ்

    நோட்டாவுக்கு ஓட்டு

    நோட்டாவுக்கு ஓட்டு

    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த அழைப்பு ஒரு சாதாரண அழைப்பு. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தேன். அதே போன்று நானும் நோட்டாவுக்கு தான் வாக்களித்திருந்தேன்.

    கணிசமான வாக்குகள்

    கணிசமான வாக்குகள்

    இதன் விளைவாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது நோட்டாவிற்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது என்று. நோட்டாவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக காஞ்சிபுரத்தில் மட்டும் 23 ஆயிரம் வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரியிலும் நோட்டா வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது.

    மனமார்ந்த நன்றிகள்

    மனமார்ந்த நன்றிகள்

    நோட்டா வளராமல் இருப்பது மிகவும் நல்லது. தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மத்திய அரசு தயவு கூர்ந்து தமிழகத்தை சேர்ந்த திட்டங்களை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவியுங்கள்.

    கமலுக்கு வாழ்த்து

    கமலுக்கு வாழ்த்து

    பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தை மாற்றான் தாய் போல் பார்க்காமல் எங்களுடைய திட்டங்களை மகிழ்ச்சி அளிக்கும் படி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர் கமலஹாசன் பொறுத்தவரை இன்னும் வளர வாழ்த்துக்கள்.

    திமுகவுக்கு அதிகரிப்பு

    திமுகவுக்கு அதிகரிப்பு

    டிடிவி தினகரன் பொருத்தவரை வாக்குகள் நிறைய குறைந்துள்ளது. அதேபோன்று திமுக பொருத்தவரை 43 சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளது. இவ்வாறு நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.

    English summary
    Actor Anandraj has said that he voted for Nota. Anandraj has met press today in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X