சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ.. கருணாநிதி.. வைகோ போல மாற வேண்டும்.. தமிழிசை சௌந்தரராஜனுக்கு இப்படி ஒரு ஆசையா!

மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போலவும், மதிமுக எம்பி வைகோ போலவும் ஆக வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை - உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை

    சென்னை: மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போலவும், மதிமுக எம்பி வைகோ போலவும் ஆக தனக்கு ஆசை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    பாஜகவில் கடந்த 20 வருடமாக சிறப்பாக பணியாற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜக தலைவராக இருந்த இவர் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த மாதம் தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்ததுஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது

    என்ன விழா

    என்ன விழா

    சமீப நாட்களாக பல்வேறு அமைப்பு சார்பாக தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுநலசங்கம் அமைப்பு சார்பாக இன்று பாராட்டு விழா நடந்தது. சென்னையில் நடந்த இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    இந்த விழாவில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தமிழ்நாட்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இதில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

    என்ன தமிழகம்

    என்ன தமிழகம்

    இதில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகம் மீதான என் அன்பு எப்போதும் போல இருக்கும். தமிழக அரசியலை தீவிரமாக கவனித்து வருகிறேன். ஆளுநர் என்பது வேலையில்லாத பணி என்று கூறுவார்கள். ஆனால் அப்படி இல்லை. ஆளுநராக ஆன பின்தான் கடினமாக உழைத்து வருகிறேன். தீவிரமாக நான் வேலை பார்த்து வருகிறேன்.

    முக்கியம்

    முக்கியம்

    என்னை ஆளுநராக பார்ப்பதை விட மக்களின் சேவகராக பார்ப்பதே எனது விருப்பம். என்னை யாரும் மாண்புமிகு என்று அழைக்க வேண்டாம். எப்போதும் போல என்னை பாசமான சகோதரியாக பார்த்தாலே போதும். நான் அப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

    தனது விருப்பம்

    தனது விருப்பம்

    எனக்கு மரியாதையில் கருணாநிதி போல ஆக வேண்டும், துணிச்சலில் ஜெயலலிதா போல மாற வேண்டும், சமூக அக்கறையில் ராமதாஸ் போல் உருவெடுக்க வேண்டும், எளிமையாக பழகுவதில் விஜயகாந்த் போன்று இருக்க வேண்டும், பேச்சாற்றலில் வைகோவை போலவே பேச வேண்டும், இதுவே என் ஆசை, என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    I Wanted to be like Karunanidhi and Jayalalitha says Tamilisai Soundararajan in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X