சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன்.. கு.க செல்வம் பளீர்.. திமுக வரலாற்றில் முதல்முறை.. பின்னடைவு

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க செல்வம் சட்டசபையில் தனித்து செயல்பட போகிறேன், கட்சி சார்பற்ற உறுப்பினராக இருக்க போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். பாஜக தலைவர்கள் உடன் நெருக்கமாக செயல்பட்டதாலும், திமுக தலைமையை விமர்சித்ததாலும், திமுகவின் விளக்க நோட்டீஸுக்கு சரியான விளக்கம் அளிக்காத காரணத்தாலும் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஆனால் இவர் தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிப்பார். இவர் இன்னும் வேறு கட்சி எதிலும் இணையவில்லை. பாஜகவில் விரைவில் இவர் இணைய வாய்ப்புகள் உள்ளது.

குடும்ப சபை அமைக்க முகேஷ் அம்பானி திட்டம்.. இனி ரிலையன்ஸ்ஸின் எதிர்காலம் இதுதான்!குடும்ப சபை அமைக்க முகேஷ் அம்பானி திட்டம்.. இனி ரிலையன்ஸ்ஸின் எதிர்காலம் இதுதான்!

நீக்க முடியாது

நீக்க முடியாது

கு.க செல்வம் வேறு கட்சியில் இணையும் முன் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக இனி கு.க. செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இனி கு.க. செல்வம் சட்டசபையில் தனித்து செயல்படுவார். அடுத்த வருடம் தேர்தல் வரும் வரை கு.க. செல்வம் தனது எம்எல்ஏ பதவியை இழக்க மாட்டார். அதாவது கு.க செல்வம் மீது திமுக கட்சி தாவல் தடை சட்டத்தை பிரயோகிக்க முடியாது.

எங்கே பேசுவார்

எங்கே பேசுவார்

பெரும்பாலும் குளிர்கால கூட்ட தொடர் அல்லது அடுத்த வருட இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டிலும் இவர் திமுகவிற்கு எதிராக சட்டசபையில் பேச வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இவருக்கு தனியாக சட்டசபையில் இருக்கைகொடுக்கப்படும். சட்டசபைக்குள் இருந்து பாஜக அல்லது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எங்கே பேசுவார்

எங்கே பேசுவார்

பெரும்பாலும் குளிர்கால கூட்ட தொடர் அல்லது அடுத்த வருட இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டிலும் இவர் திமுகவிற்கு எதிராக சட்டசபையில் பேச வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இவருக்கு தனியாக சட்டசபையில் இருக்கைகொடுக்கப்படும். சட்டசபைக்குள் இருந்து பாஜக அல்லது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இது தொடர்பாக கு.க செல்வமே தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சட்டசபையில் கட்சி சார்பற்ற உறுப்பினராக செயல்படுவேன்.என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. அவர்களுக்காக எப்போது என் பணிகளை செய்வேன். மக்கள் நலனுக்காக என் பணிகள் தொடங்கும் என்று கு. க. செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    Mood of the Nation Survey | மோடி தான் சிறந்த பிரதமர்
    பாஜக இல்லை

    பாஜக இல்லை

    தமிழக சட்டசபையில் கு.க செல்வம் அதிகாரபூர்வமற்ற பாஜக உறுப்பினர் போல செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பாஜகவிற்கு ஆதரவாக பேச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். திமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக சட்டசபையில் பேசினால், சட்டசபையே பரபரப்படையும். பாஜகவிற்கு இந்த விஷயம் இப்போதே சந்தோசத்தை கொடுத்துள்ளது.

    English summary
    I will act independently in assembly sessions says MLA Ku Ka Selvam who expelled from DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X