சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக என்ன முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    'முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்' - நடிகர் ரஜினி பேட்டி

    நடிகர் ரஜினிகாந்த் திடீரென இன்று தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

    ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.

    அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி

    ஆலோசனையில் 37 பேர் பங்கேற்பு

    ஆலோசனையில் 37 பேர் பங்கேற்பு

    இந்த ஆலோசனையில் மொத்தம் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் 2 மணிநேரம் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    பால்கனியில் ரஜினிகாந்த்

    பால்கனியில் ரஜினிகாந்த்

    ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் மண்டபத்தின் பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையை அசைத்தார். பின்னர் அங்கிருந்து உடனடியாக போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு ரஜினிகாந்த் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

    கருத்தை பகிர்ந்து கொண்டேன்

    கருத்தை பகிர்ந்து கொண்டேன்

    இன்று மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவங்க கருத்தை சொன்னாங்க. நானும் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

    என் முடிவை சீக்கிரம் தெரிவிப்பேன்

    என் முடிவை சீக்கிரம் தெரிவிப்பேன்

    சோ... நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நாங்க உங்க கூட இருப்போம் என்று சொல்லி இருக்காங்க. நான் வந்து என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தெரிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

    English summary
    Actor Rajinikanth said that "I will announce my decision on Political party very soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X