சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போஸ்டர் விவகாரம்.. உயிர் மூச்சு உள்ளவரை ஓபிஎஸ்- ஈபிஎஸ்க்கு உண்மையாக இருப்பேன்.. பதறிய அமைச்சர்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் என ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவுக்கு இரட்டை தலைமை இருப்பதால் யாரிடம் அதிகாரம் உள்ளது என்று தெரியவில்லை. இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது என அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்

ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு 'பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருக' என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி

செய்தியாளர்கள் கேள்வி

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நேர்மையாக இருப்பேன்

நேர்மையாக இருப்பேன்

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார். மேலும் இறுதி மூச்சு இருக்கும் வரை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.

போஸ்டர் ஒட்டியது தவறு

போஸ்டர் ஒட்டியது தவறு

பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு எனவும், தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

மேலும் தனியார் பள்ளிகள் அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

English summary
Minister Sengottaiyan says I am not the responsible for the poster issue. But i will be very honest to OPS and EPS till my last breath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X