• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

யோகா டீச்சரின் "டெமோ".. குப்புற படுங்க.. இதை பண்ணுங்க.. கொரோனோ ஓடீரும்.. ஒரு சிட்டிங் ரூ.3ஆயிரம்தான்

Google Oneindia Tamil News

சென்னை: "கொரோனா வைரஸை குணப்படுத்த என்னால் முடியும்.. இந்த யோகா மட்டும் செய்யுங்க போதும்" என்கிறார் யோகா டீச்சர் முகுந்தி!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி வருகிறது.. இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த மருந்து முதல் ஒவ்வொன்றை பலர் குறிப்புகளாக சொல்லி வருகிறார்கள். எனினும் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.

அதற்குள் 213 பேருக்கு மேல் சீனாவில் இறந்துவிட்டனர்... 8 ஆயிரத்துக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸுக்கு பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து.. திருவண்ணாமலை வரை இந்த வைரஸ் துரத்தி கொண்டு வந்துவிட்டது.

ஊத்தப்பம்

ஊத்தப்பம்

ஆனால் அதற்குள் ஆளாளுக்கு இதை வைத்து காசு பார்க்க இறங்கி விட்டனர்.. காரைக்குடியில் பிரசிடென்ட் என்ற ஹோட்டலில் ஒரு நோட்டீஸ் போர்டில் "கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்" என்று எழுதி வைத்தார்.. கூடவே "விலை ரூ.50" என்றும் மறக்காமல் எழுதியிருந்தனர். சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்லதுதான் என்றாலும், இவரது நோட்டீஸ் போர்டு இணையத்தில் வைரலானது.

யோகா டீச்சர்

யோகா டீச்சர்

அதேபோல, யோகா டீச்சர் ஒருவர் இன்னொரு பரபரப்பை கிளப்பி உள்ளார். குப்புற படுத்துக்கிட்டு யோகா பண்ணினால், கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்கிறார். இந்த டீச்சர் பெயர் முகுந்தி... யோகா ஆசிரியை கொரோனா வைரஸை தன்னால் கட்டுப்படுத்த முடியும், அதற்காக தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க யோகாசனம் ஒன்று உள்ளது என்று கூறுகிறார்.. இதனை சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே இதை பகிரங்கமாக தெரிவித்தார்.

சலப்பாசனம்

சலப்பாசனம்

சலப்பாசனம் என்ற யோகாவை 5 நாட்கள் செய்தாலே போதும்... கொரோனா வைரஸ் கிட்ட வரவே வராது.. என்கிறார் டீச்சர் முகுந்தி! வைரஸை பற்றி பேசியவர் அப்படியே சந்தடி சாக்கில், முற்றிப்போன கேன்சர், எய்ட்ஸ் நோயாளிகளை கூட தன்னால் சிறப்பு யோகாவால், குணப்படுத்த முடியும் என்று ஒரு பிசனிஸ் பிட்டை போட்டார். இதோடு விடுவார் என்று பார்த்தால், யோகாவால் தன்னுடைய டிஎன்ஏவையே மாற்றிக் கொண்டதாக சொல்லி பெரிய அறிவியில் குண்டை தூக்கி எல்லார் மண்டையிலும் போட்டார்.

டெமோ

டெமோ

கொரோனா வைரஸ் குணமாக்க ஒரு சிட்டிங்கிற்கு 3 ஆயிரம் ரூபாயாம். இதையெல்லாம் சொல்லி கொண்டே வந்த யோகா டீச்சர், திடீரென ஒருவரை யோகா செய்து டெமோ காட்ட சொன்னார்.. அந்த நபர் கீழே குப்புற படுத்து, இப்படியும், அப்படியும் விழுந்து புரண்டு, கை, காலை தூக்கி பிடித்து காட்டி.. ஆசனங்களை செய்து எல்லாரையும் மிரட்டி விட்டார்.. அவர் வேறு யாருமில்லை..யோகா டீச்சரின் கணவர் தான்!

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

யதார்த்த விஷயம் இதுதான்.. இன்னும் யாராலுமே இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. கொஞ்ச நாள் ஆகும் என்கிறார்கள்.. இதை உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ளது.. சித்த மருத்துவத்தில் இது சம்பந்தமான தீர்வு இருப்பதாக சொன்னாலும், அது சம்பந்தமான அறிக்கையை தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தாலும், எதுவுமே இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உடனடி தீர்வு?

உடனடி தீர்வு?

யோகாசனமும், சின்ன வெங்காயமும், சித்த மருத்துவமும் நமக்கு மாபெரும் மகத்தான வரப்பிரசாதம்தான்.. மறுப்பதற்கில்லை.. ஆனால் இந்த விஷயம் எல்லாம் தெரிந்த சீனாக்காரர்களுக்கும் தெரியாமல் இருக்காது.. அதே சமயம் செத்து செத்து மடிந்த வரும் உயிர்களுக்கு உடனடி தீர்வாகவும் இவை யாவும் இப்போதைக்கு அமையாது என்பதே உண்மை!

English summary
chennai yoga teacher mukunthi says that, she will cure coronavirus virus by special yogasanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X