சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி!

சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன் என்று திருமணத்திற்கு பின் உடுமலைபேட்டை கவுசல்யா பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன் என்று திருமணத்திற்கு பின் உடுமலைபேட்டை கவுசல்யா பேட்டி அளித்துள்ளார்.

உடுமலைபேட்டை கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

இந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். முக்கியமாக கொல்லப்பட்ட சங்கரின் குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கொன்றனர்

கொன்றனர்

சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனியாக சட்ட போராட்டம் மூலம் போராடிய கவுசல்யா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதில் சிலருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி அளித்துள்ளார். அதில் சாதி ஒழிய தொடர்ந்து பாடுபடுவேன். சாதி ஒழிப்புக் போராட்டத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம். ஜாதிக்கு எதிரான எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.

ஆணவ படுகொலை

ஆணவ படுகொலை

ஆணவ படுகொலைகளை எதிர்ப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு போராடுவோம். தமிழக அரசு உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி அளித்துள்ளார்.

பெரியார் சிலைக்கு மரியாதையை

பெரியார் சிலைக்கு மரியாதையை

முன்னதாக திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்கள். அதேபோல் இந்த சுயமரியாதை திருமணத்தில் சுயமரியாதை இயக்கத்தினர், பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

English summary
I will fight against caste hereafter with Shakthi says Udumalaipettai Kowsalya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X