சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதாரத்தை தேடுகிறேன்.. கிடைத்ததும் வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்.. சின்மயி உறுதி!

பாஸ்பார்ட் கிடைத்தவுடன் வைரமுத்து மீது வழக்கு தொடருவேன் என சின்மயி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி- வீடியோ

    சென்னை: வைரமுத்து மீது வழக்கு தொடுக்க அதற்கு ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அதைதான் வீட்டில் தேடி கொண்டிருக்கிறேன். அது கிடைத்தவுடன் நிச்சயம் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    மீ டூ விவகாரத்தை ஒட்டி தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தது. இதில் சின்மயியும் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு சின்மயி அளித்த பதில்கள்:

    முதுகை தடவிய குற்றச்சாட்டுக்கு அர்ஜுன் மறுப்பு.. ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடருவதாக அறிவிப்பு முதுகை தடவிய குற்றச்சாட்டுக்கு அர்ஜுன் மறுப்பு.. ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடருவதாக அறிவிப்பு

    தவிர்க்க முடியவில்லை

    தவிர்க்க முடியவில்லை

    மதன் கார்க்கி எனது நண்பர். இதனால் வைரமுத்துவுக்கு எனது திருமணத்திற்கான அழைப்பிதழை வைத்தேன். திருமணத்தின்போது எனது மாமனார், மாமியாருக்கு வைரமுத்து விவகாரம் தெரியாது என்பதால் காலில் விழாமல் தவிர்க்க முடியவில்லை. வைரமுத்து எனது திருமணத்திற்குப் பிறகு ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். ஆனால் நான் போகவில்லை.

    அரசியல் சாயம் வேண்டாம்

    அரசியல் சாயம் வேண்டாம்

    ஆண்டாள் சர்ச்சைக்கும் இதற்கும் தொடர்பில்லை. நான் ஆண்டாள் விவகாரம் தொடர்பாக ஒரு டிவீட் கூட போட்டதில்லை. இதில் அரசியல் தேவையில்லை. இந்த மீ டூ விவகாரத்தில் எல்லோருமே சிக்கி வருகின்றனர். இதில் பாகுபாடே இல்லை. இடது, வலது என்று எல்லோருமே சிக்குகின்றனர். என் மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்.

    கேள்வி மேல் கேள்வி

    கேள்வி மேல் கேள்வி

    பாஜக என்றில்லை, பத்திரிகையாளர், கடவுள் நம்பிக்கை உடையவர், இல்லாதவர், கார்ப்பரேட் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை பெயர்கள் அடிபட்டுள்ளன. பெண்களுக்கு இந்த மீ டூ ஒரு நல்ல வாய்ப்பு. அதனால் சம்பந்தப்பட்டவர்களை இனி கேள்வி மேல் கேள்வி கேட்கவே செய்வோம்.

    ஆதாரம் உள்ளது

    ஆதாரம் உள்ளது

    வைரமுத்து மீது கண்டிப்பாக வழக்கு தொடுப்பேன். ஏனென்றால் அவர் ஒரு சரியான ஆள் இல்லை. எந்த ஆண்டு வெளிநாட்டு சம்பவம் நடந்தது என சரியாக ஞாபகம் இல்லை. நான் போய் வந்த பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் மற்றும் நிகழ்ச்சி நடந்ததற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் உள்ளது.

    பாஸ்போர்ட் தேடுகிறேன்

    பாஸ்போர்ட் தேடுகிறேன்

    அதைதான் வீட்டில் தேடி கொண்டிருக்கிறேன். அதுதான் எனது வழக்குக்கு ஆதாரம். அதனால்தான் இதுவரை நான் வழக்கு தொடுக்கவில்லை. இது ஏதோ சும்மா ஹேஷ்டேக் போட்டுவிட்டுப் போகும் விஷயம் அல்ல. இது சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றார் சின்மயி.

    English summary
    I will file a case against VairaMuthu: Chinmay
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X