சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் ரெடிதான்.. டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணிக்கு தயார்.. கருணாஸ் பல்டி!

லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணி வைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணிக்கு தயார் - கருணாஸ்

    சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணி வைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை போலவே முக்குலத்தோர் புலிப்படை, தலைவர் கருணாஸ் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கருணாஸ் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.

    ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக ஆட்சிக்கு 5 வருடம் முழுதாக ஆதரவு அளிப்பேன். நான் போட்டியிட்டது இரட்டை இலை சின்னத்தில்தான். அதனால் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் கூறினார்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில் திடீரென்று பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் இருந்து பாஜகவை கருணாஸ் விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கருணாஸ் பேட்டியளித்த இருக்கிறார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரை விமர்சனம் செய்கிறார்கள்.

    கூட்டணி என்ன

    கூட்டணி என்ன

    கூட்டணி குறித்து விவாதிக்க அழைத்தால் டிடிவி தினகரனை கண்டிப்பாக சந்திக்க தயார்.மக்களவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பிப்ரவரி 27ல் முடிவு எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

    பாமக கூட்டணி

    பாமக கூட்டணி

    கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை தற்போதைய தேர்தலில் டிடிவி தினகரன் பிரிப்பார். அவருக்கு நிறைய வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநரிடம் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது ஏன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

    ஏன் செய்தீர்கள்

    ஏன் செய்தீர்கள்

    தற்போது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என் தெரியவில்லை. இதை அவர்தான் விளக்க வேண்டும். கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என பாஜக பெரிதாக பேசி வந்தது. ஆனால் கடைசியில் அதே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறது. தைரியம் இருந்தால் தனித்து போட்டியிட வேண்டியது தானே என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    I will form an alliance with AMMK TTV Dinakaran, If he calls says Karunas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X