சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட்டவட்டம்

ராஜினாமா செய்தது செய்ததுதான் என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என் முடிவில் மாற்றமில்லை.. இயக்குனர் பாக்யராஜ் பேட்டி-வீடியோ

    சென்னை: "நான் ராஜினாமா செய்தது செய்ததுதான்... அதை திரும்ப பெற மாட்டேன்.. சங்கத்தில் எல்லோரும் நல்லா வரணும்" என்று இறுதி முடிவை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்.

    சர்கார் பட விவகாரம் தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை கே.பாக்யராஜ் அறிவித்திருந்தார். இதுகுறித்து தனது நீண்ட விளக்கத்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். அதில் குறிப்பாக, சர்கார் பிரச்சனையில் பல அசௌகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது.

    'வெண்ணை திரண்டு வரும்போது' வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள் 'வெண்ணை திரண்டு வரும்போது' வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள்

    திடீர் ராஜினாமா

    திடீர் ராஜினாமா

    அதுக்கு முக்கிய காரணும்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு நேரடியா ஜெயிக்காம நான் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்" என்றும் தெரிவித்திருந்தார். பாக்யராஜின் இந்த திடீர் ராஜினாமா சிறிது நேரத்திற்கெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து, அவரது ராஜினாமா குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் அறிக்கை வெளியிட்டார்.

    தொடர வேண்டும்

    தொடர வேண்டும்

    அதில், "தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்றும், பாக்யராஜ்தான் தலைவராகத் தொடர வேண்டும் என்று செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். எனவே எப்போதும் போல பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

    ஒன் இந்தியா தமிழ்

    ஒன் இந்தியா தமிழ்

    இப்படி ஒரே நாளில் பாக்யராஜின் ராஜினாமாவும், அதனை ஏற்க மறுத்த விவகாரமும் கலந்து தமிழ் சினிமாவை கலங்கடித்து வருகிறது. திடீர் ராஜினாமா குறித்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பாக்யராஜிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், "நான் ஏற்கனவே முடிவு பண்ணி ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்துட்டேன்.

    நல்லா இருக்கணும்

    நல்லா இருக்கணும்

    அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் என்ன காரணம் சொல்லி ராஜினாமா செய்தேனோ அதிலேயே இன்னமும் உறுதியாகத்தான் உள்ளேன் என்றார். ஆனால் தங்களின் ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் சார்பில் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, "இல்லை.. வேண்டாம்.. சங்கம் நல்லபடியா இருக்கணும்... சங்கத்தில் எல்லோருக்குமே நல்லது நடக்கணும். அதுவே எனக்கு போதும்". இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.

    English summary
    I will not withdraw my Resignation: Director k.Bhagyaraj
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X