சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று ஜெ தீபா அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று ஜெ தீபா அறிவித்துள்ளார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சென்ற மாதமே கலைத்துவிட்டதாக அறிவித்த ஜெ.தீபா தற்போது அதே பேரவையை அதிமுகவுடன் இணைத்துள்ளார். ஆனால் இன்னும் இதுகுறித்து அதிமுக தலைவர்கள் யாரும் கருத்து கூறவில்லை.

இது தொடர்பாக பேட்டியளித்த ஜெ.தீபா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இவர் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பேரவை

என்ன பேரவை

ஜெ.தீபா தன்னுடைய பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் எல்லோரையும் அதிமுகவில் இணைத்துள்ளார். இதற்காக தீபா பெரிய பட்டியல் ஒன்றை அதிமுக கட்சியிடம் கொடுக்க இருக்கிறார். அதிமுகவில் தன்னுடைய பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று தீபா கூறியுள்ளார்.

என்ன கட்சி

என்ன கட்சி

அதே சமயம் தனக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை. நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன். அதனால்தான் அவரின் அதிமுகவில் இணைந்து இருக்கிறேன் என்று தீபா கூறியுள்ளார்.

எப்படி ஜெயலலிதா

எப்படி ஜெயலலிதா

இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நான் மீட்பேன் என்று தீபா கூறியுள்ளார். அதன்படி ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அது அதிமுக சொத்து கிடையாது. அரசின் சொத்து கிடையாது. அது எங்களுக்கு சொந்தமானது.

சட்டம்

சட்டம்

அது இப்படி பூட்டி கிடப்பதை நான் விரும்பவில்லை. அதை விரைவில் மீட்பேன். போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கண்டிப்பாக ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று ஜெ தீபா அறிவித்துள்ளார்.

English summary
I will recover the Poes Garden House legally says J Deepa in Pressmeet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X