சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கே என்ஆதரவு .. எடப்பாடியை சந்தோஷப்படுத்திய பிரபுவின் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: ஆளும் அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அதிமுகவிற்கு ஆதரவாகவே வாக்களிக்கப் போவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவாளராக இருப்பதுடன் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும் அதிமுக கொறடா சபாநாயகருக்கு புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு சட்டசபை சபாநாயகர் தனபால் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

i will vote aiadmk only, i am not support no confidence motion in tamilnadu says prabhu mla

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்னசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்டுள்ளதால் அவரது நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியிருந்தனர். இதை ஏற்று சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க மாட்டேன். உச்சநீதிமன்ற உத்தரவுபடி, எனது நோட்டீஸ்க்கும் தடை செல்லுமா? என பேரவைச் செயலர் அலுவலகத்தில் கேட்டபோது, அவர்கள் உரிய விளக்கம் அளிக்காததாலேயே, உச்சநீதிமன்றத்தை நாடினேன்.

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக ஸ்டாலின் இருப்பார்... கனிமொழி சொல்கிறார்

நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அதிமுகவிற்கே எனது ஆதரவு என்றும் கூறினார். இதனால் ஒரு எம்எல்ஏவின் பலம் முதல்வர் பழனிச்சாமிக்கு அதிகரித்துள்ளதால், அவர் சற்று நிம்மதியாக உள்ளார்.

English summary
kallakuruchi mla prabhu says, i will vote aiadmk only, i am not support no confidence motion in tamilnadu assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X