சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்- கோமதி மாரிமுத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    தங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு

    சென்னை: ஆசிய தடகள போட்டியில் சாதித்து தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்றும் கோமதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறி, ரூபாய் 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கோமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்.

    I will win in the Olympics .. And then Im become a coach..Gomathi Marimuthu hope

    இதனையடுத்து ஸ்டாலினுக்கு கோமதி நன்றி தெரிவித்தார். ஸ்டாலினிடம் ஊக்கத்தொகை பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டியுள்ளது தனக்கு விளையாட்டில் மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.

    என்னை போல விளையாட ஆர்வம் கொண்டு வருபவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். விளையாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

    புதுவைக்குப் போலாமா.. போட் ரைடு பண்ணலாமா.. சூடு பிடிக்கும் சுண்ணாம்பாறு படகு சவாரி!புதுவைக்குப் போலாமா.. போட் ரைடு பண்ணலாமா.. சூடு பிடிக்கும் சுண்ணாம்பாறு படகு சவாரி!

    மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு மைதானங்களை ஏற்படுத்தி கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஒலிம்பிக் போட்டிக்காக தற்போது தயாராகி கொண்டிருப்பதாக கூறிய கோமதி, அதில் பதக்கம் வென்ற பின்னர் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாக தனது ஆசையை கூறினார்.

    English summary
    Gomathi Marimuthu, who won gold at the Asian Athletics Championship, is now preparing for the Olympic Games.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X