நான் என்ன வடிவேலா? என்னால் எப்போதும் முதல்வராக முடியாது.. திருமாவளவன் கலகல பேச்சு!
நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பழங்குடி மற்றும் இருளர் இன மக்கள் சார்பாக மனைப்பட்டா - சாதிச்சான்று பழங்குடியினர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அதன் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.
பல உணர்ச்சிகரமான விஷயங்களை பேசிய அவர், தற்காலிக அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசினார். இடையே இடையே தன்னுடைய பேச்சில் அவர் பாமகவையும் கிண்டல் செய்தார்.

என்ன கொள்கை
திருமாவளவன் தனது பேச்சில், சிலர் எல்லாம் கொள்கை கொள்கை என்று கூறிவிட்டு நிறைய திருடுவார்கள். வகைவகையாக திருடிவிட்டு கடைசியில் போராளி என்று கூறுவார்கள். மாவீரன் என்று சொல்லிக்கொள்வார்கள். உயர்சாதியில் பலர் அப்படி இருக்கிறார்கள். நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள். நேர்மையாக வாழ வேண்டும்.

என்ன உழைப்பு
நாம் உழைத்து வாழ்கிறோம். எப்போதும் அப்படித்தான் வாழ வேண்டும். நாம் பிறரை போல சத்திரியர்கள் கிடையாது. சாதாரண மக்கள். நாம் பொய் சொல்ல கூடாது. நாம் திருட கூடாது. நமக்கு பேரம் பேச தெரியாது. நாம் சாதாரணமாக வாழ வேண்டும்.

விருந்து என்ன
எனக்கு அனைவரையும் அழைத்து விருந்து கொடுக்க தெரியாது. என்னிடம் தோட்டமும். நான் அழைத்தால் யாரும் வந்து சாப்பிட கூட மாட்டார்கள். என்னிடம் 10க்கு 10 வீடுதான் இருக்கிறது. அங்கு கூப்பிட்டால் முதல்வர் எல்லாம் வந்து சாப்பிடமாட்டார்.

வடிவேல் இல்லை
எனக்கு முதல்வர் ஆகும் எண்ணமெல்லாம் கிடையாது. நான் என்ன வடிவேலா, நானும் ரவுடிதான், நானு ரவுடிதான் என்று சொல்ல. எனக்கு அரசியல் நிலவரம் தெரியும். நாம் முதல்வர் ஆக முடியாது என்பதை உணர்ந்தே நான் அரசியல் செய்து வருகிறேன், என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications