சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    sagayam ias said I work for social change

    சென்னை: பதவி உள்பட எது தடையாக வந்தாலும் அதை விட்டுவிட்டு சமூக மாற்றத்திற்க்காக பணியாற்றுவேன் என சகாயம் ஐஏஎஸ் மக்கள் பாதை இயக்கத்தின் விழாவில் பேசினார்.

    சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங் கில் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சகாயம் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொது வாழ்வில் நிகரற்ற நேர்மையாளருக்கான விருதானது நல்லகண்ணு உள்பட 8 பேருக்கு வழங்கி கௌரவபடுத்தப்பட்டது.

    தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சிதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி

     அமீர் பங்கேற்பு

    அமீர் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர், சட்ட பஞ்சாயத்து இயக்கம் செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்கள், மற்றும் இளைஞர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மக்கள் பாதை இளைஞர்கள்

    மக்கள் பாதை இளைஞர்கள்

    இந்த விழா மேடையில் சகாயம் ஐஏஎஸ் பேசுகையில், "லஞ்சமும் ஊழலும் மாற்றப்பட வேண்டும் என சொன்னால் அது சமூகத்தில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு சமூக மாற்றத்தை உண்டாக்கும் ஆற்றல் மக்கள் பாதை இளைஞர்களுக்கு இருக்கிறது.

    காலம் நிச்சயம் வரும்

    காலம் நிச்சயம் வரும்

    என்னை இந்த சமூகம் தான் ஆளாக்கி அகிலத்திற்கு அறிமுகப்படுத்தியது.எனவே இந்த தமிழ் சமூகத்திற்க்கு திருப்பி கொடுக்க நான் கடமைப்பட்டவன். அந்த காலம் நிச்சயம் வரும்.

    ஊழல் என்பது ஏழைகளுக்கு எதிரானது. அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையானது. மானுட பண்பாட்டிற்கு எதிரானது. இது ஓர் குற்றம்.

    நேர்மையானவர்கள்

    நேர்மையானவர்கள்

    நாம் ஒவ்வொரு மாவட்டத்திலே இருக்கும் அனைத்து நேர்மையானவர்களை கண்டுபிடித்து அவர்களின் பதிவை சமூக வளைதளங்களில் பதிவிட வேண்டும். நிச்சயமாக நாளைய சமூகத்தின் மாற்றம் நம்மால் தான் நடைபெற இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்றத்திற்கு பதவி உட்பட எது தடையாக வந்தாலும் அதை விட்டு தான் சமூக மாற்றத்திற்காக பணியாற்றுவேன்" என தெரிவித்தார்.

    English summary
    sagayam ias said I work for social change. Corruption is against the poor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X