சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிக் டாக்கை தடை பண்ணுங்க.. சந்தோசபடுவேன்.. தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் தான்தான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் தான்தான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த தமிழக சட்டசபையில் சுவாரசியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. டிக் டாக் ஆப் தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது. இதில் பல தவறான வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.

I would be happy If Tik Tok got a ban says BJP chief Tamilisai Soundararajan

இதற்கு, டிக் டாக் ஆப் மீது கண்டிப்பாக தடை விதிக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். தற்போது இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் நான்தான். அதை கண்டிப்பாக நான் வரவேற்பேன். டிக் டாக்கில் தேவையில்லாமல் பலரை கிண்டல் செய்கிறார்கள்.

எங்களை போன்ற அரசியல்வாதிகளை, பிரபலங்களை இந்த ஆப் மூலம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த ஆப்பிற்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும்.

லோக்சபாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்.

கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் நான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார். பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்பி தம்பிதுரை பேசி வருவது தெரியும். அது கண்டிப்பாக அதிமுகவின் கருத்தாக இருக்காது. சொந்த கருத்தாகவே இருக்கும், என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
I would be happy If Tik Tok got a ban says Tamilnadu BJP chief Tamilisai Soundararajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X