சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் இணையுங்கள்.. முக அழகிரிக்கு அழைப்பு.. என்ன முடிவெடுக்க போகிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: முக அழகிரியின் தீவிர ஆதரவாளாக இருந்த கேபி ராமலிங்கம், பாஜகவில் நேற்று சேர்ந்தார். அப்போது அவர் கூறுகையில் பாஜகவில் இணையுமாறு முக அழகிரிக்கு அழைப்பு விடுப்பேன் என கூறினார்.

மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளரும் திமுகவின் முன்னாள் எம்பியுமான கே.பி ராமலிங்கம் திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார்.

அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்த ஒரே நாளில்.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை.. அதிமுக ஷாக்!பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்த ஒரே நாளில்.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை.. அதிமுக ஷாக்!

புதிய அரசியல் பயணம்

புதிய அரசியல் பயணம்

அப்போது கேபி ராமலிங்கம் அளித்த பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவம் தனக்கு இல்லை. இதனால் பாஜகவில் இணைந்தேன். புதிதாக அரசியல் பயணத்தை இங்கு தொடங்கியிருக்கிறேன் என்றார்.

பாஜகவில் இணைய அழைப்பு

பாஜகவில் இணைய அழைப்பு

இதைத்தொடர்ந்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு கேபி ராமலிங்கம் அளித்த பேட்டியில், பாஜகவில் இணைவதற்கு மு.க. அழகிரி வாழ்த்தினார். மு.க. அழகிரி புதிதாக கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார்., அவரை பாஜகவில் இணைய அழைப்பு விடுப்பேன் என்றார்.

அழகிரி பதில்

அழகிரி பதில்

முன்னதாக முக அழகிரியை பாஜகவில் சேர்க்க கடந்த ஒரு மாதங்களாகவே தூதுவிடும் படலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எல் முருகன் அண்மையில் அளித்த பேட்டியில் முக அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார். ஆனால் அழகிரியோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மறுத்தார்.

தனிகட்சி வாய்ப்பு

தனிகட்சி வாய்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு கருணாநிதியின் மகனாகிய மு.க.அழகிரி, திமுகைவிட்டு விட்டு வேறு ஒரு கட்சியில் இணைவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். தனிக்கட்சி தொடங்க வேண்டுமானாலும் வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு காலத்திலும் பாஜகவில் சேர்வது குறித்து ஆர்வம் காட்டமாட்டார் என்றும் கூறுகிறார்கள்.

சேரும் பிரபலங்கள்

சேரும் பிரபலங்கள்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரையும் பாஜக இணத்து வருகிறது. அண்மையில் வி.பி துரைசாமி, குஷ்பு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இப்போது கே.பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்துள்ளார்.

English summary
KP Ramalingam, who was an ardent supporter of MK Alagiri, joined the BJP yesterday. He said that i would call Alagiri to join bjp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X