சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்

நேரடியாக பிரதமரை தேர்வு செய்ய முடிந்தால் ராகுல்காந்திதான் எங்கள் சாய்ஸ் என்று தமிழக, கேரளா வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ராகுல்காந்தி பிரதமராக தென்னிந்தியாவில் அமோக ஆதரவு உள்ளது. தமிழகத்தில் 43.46 சதவிகிதம் பேரும் கேரளாவில் 57.92 சதவிகிதம் பேரும் ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் மோடிக்கு கேரளாவில் 36.19 சதவிகிதம் பேரும், கேரளாவில் 28.16 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும் இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக உள்ளது.

 IANS C-Voter opinion poll Kerala and Tamil Nadu support to Rahul Gandhi

தற்போது தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. தமிழகம், கேரளா,மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் பாஜக தனது கணக்கை பெரிய அளவில் தொடங்க நினைக்கிறது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் நமைபெறுகிறது. புதுச்சேரி, கேரளா, தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்புதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு

இந்த ஐந்து மாநிலங்களிலும் ஐஏஎன்எஸ் சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமரை நேரடியாக தேர்வு செய்ய முயன்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. கேரளா, தமிழகத்தில் ராகுல்காந்திக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 43.46 சதவிகிதம் பேரும், கேரளாவில் 57.92 சதவிகிதம் பேரும் ராகுல்காந்திக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் 28.16 சதவிகிதம் பேரும், கேரளாவில் 36.19 சதவிகிதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

கேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்கேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்

அதே நேரத்தில் மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் மோடிக்கு 54.13 சதவிகிதம் பேரும், அசாம் மாநிலத்தில் 47.8 சதவிகிதம் பேரும் புதுச்சேரியில் 45.54 சதவிகிதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழகம் கேரளாவில் ராகுல்காந்தியை விட மோடி பின்தங்கியிருந்தாலும், அசாம், மேற்கு வங்கம்,புதுச்சேரியில் மோடியே முன்னணியில் இருக்கிறார். ராகுல்காந்தி சமீபகாலமாக தமிழகம்,புதுச்சேரி,கேரளா மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். ராகுலின் எளிமை தென்னக மக்களை ரொம்பவே கவர்ந்துள்ளது என்றாலும் புதுச்சேரியில் அவருக்கு குறைந்து விட்டது.

English summary
Congress scion Rahul Gandhi will trounce Prime Minister Narendra Modi if Kerala and Tamil Nadu had a chance to elect the Prime Minister directly. 57.92 per cent in Kerala and 43.46 per cent in Tamil Nadu preferred Rahul over Modi. As per the IANS C-Voter opinion poll wave 2, Rahul is leading Modi in the popularity contest in these two key south Indian states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X