சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பல மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 18 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

IAS officers, including several district collectors in Tamil Nadu transferred

தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்து அன்பழகன் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமனம். சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
18 IAS officers, including several district collectors in Tamil Nadu, have been transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X