சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆய்வில் அதிர்ச்சி.. தமிழகத்திலுள்ள 2 வவ்வால் இனங்களில் கொரோனா கண்டுபிடிப்பு.. பழங்கள் மூலம் பரவுமா?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் உலகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், தமிழகம், ​​கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காணப்படும், 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் (பி.டி.கோ.வி) தாக்கம் இருப்பதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கண்டுபிடித்துள்ளது.

Recommended Video

    ஆய்வில் அதிர்ச்சி... தமிழகத்தில் வெளவால்களுக்கு இருந்த கொரோனா வைரஸ்

    இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் இந்த தகவல் இடம் பெற்று உள்ளது.

    வவ்வால்களிடம் காணப்படும் இந்த கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை என்று புனே, தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்ஐவி) விஞ்ஞானி டாக்டர் பிரக்யா டி யாதவ் தெரிவித்தார். இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் இவரே.

    கொரோனா.. காங் எம்எல்ஏவால் வந்த சிக்கல்.. தனிமைப்படுத்தப்படும் முதல்வர்.. குஜராத்தில் பெரும் பரபரப்புகொரோனா.. காங் எம்எல்ஏவால் வந்த சிக்கல்.. தனிமைப்படுத்தப்படும் முதல்வர்.. குஜராத்தில் பெரும் பரபரப்பு

    இரு வகை வவ்வால்கள்

    இரு வகை வவ்வால்கள்

    கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரூசெட்டஸ் மற்றும் ஸ்டெரோபஸ் (Rousettus and Pteropus) இனங்களின் இருபத்தைந்து வெளவால்கள் BtCoV வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நிபா வைரஸ்

    நிபா வைரஸ்

    "இந்த பேட் கொரோனா வைரஸ்களுக்கு COVID-19 தொற்றுநோய்க்கு காரணமான SARS-CoV2 உடன் எந்த தொடர்பும் இல்லை" என்று யாதவ் கூறினார். ஸ்டெரோபஸ் வவ்வால் இனங்கள் முன்னதாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கேரளாவில் நிபா வைரஸை பரப்பியதில் முக்கியமானவை.

    ஆய்வு

    ஆய்வு

    "வவ்வால்கள் பல வைரஸ்களுக்கான இயற்கையாகவே தங்குமிடமாக உள்ளன. அவற்றில் சில நோய்க்கிருமிகள் மனிதர்களை தாக்குகின்றன. இந்தியாவில், நிபா வைரஸுடன் ஸ்டெரோபஸ் மீடியஸ் வெளவால்களின் தொடர்பு கடந்த காலத்தில் உறுதி செய்யப்பட்டது.
    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்டெரோபஸ் மற்றும் ரூசெட்டஸ் இன வெளவால்களைக் கண்டறிதல், இந்த ஆய்வின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

    பழங்கள்

    பழங்கள்

    2019ம் ஆண்டு, வவ்வால் கடித்த கொய்யாவை சாப்பிட்ட கேரள கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று அந்த மாநில நிர்வாகம் அறிவித்திருந்தது. எனவேதான் வவ்வால் கடிக்க கூடிய பழ வகைகளை கேரள மக்கள் அப்போது தவிர்த்தனர். ஐசிஎம்ஆர் ஆய்வை பார்த்தால், நாமும் இப்போது வவ்வால்கள் கடிக்கும் பழங்களை தவிர்த்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது. இப்படியாக பரவுவது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் ரிஸ்க் வேண்டாம் என நினைப்போர் அந்த வழிமுறையையும் பின்பற்றலாம்.

    English summary
    As the world grapples with the coronavirus pandemic, researchers have found the presence of a different kind of coronavirus -- bat coronavirus (BtCoV) -- in two bat species from Kerala, Himachal Pradesh, Puducherry and Tamil Nadu, according to a first of its study by the Indian Council of Medical Research (ICMR).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X