சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாமல் விட்டிருந்தால் ஆப்சென்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் அவர்கள் ஆப்சென்ட் என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்வுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் கடந்த மார்ச் இறுதியில் நடத்தப்பட இருந்த 10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்ப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உச்சத்திற்கு போனதால், 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.

 if 10th grade students did not write quarterly and half yearly exam, mark as absent

பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்றும் . காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

எனினும் சில பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாகிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. சில பள்ளிகளில் சில மாணவர்கள் காலாண்டு தேர்வுகளை எழுதாமல் இருந்தனர். இதேபோல் அரையாண்டு தேர்வையும் சிலர் எழுதாமல் இருந்தனர். சிலர் ஒரு சில பாடத்தை எழுதாமல் இருநதுள்ளார்கள்.

எம்சிஏ படிப்பு இனி இரண்டு வருட படிப்பு.. மாறும் பாடத்திட்டம்.. ஏஐசிடிஇ அறிவிப்புஎம்சிஏ படிப்பு இனி இரண்டு வருட படிப்பு.. மாறும் பாடத்திட்டம்.. ஏஐசிடிஇ அறிவிப்பு

இந்நிலையில் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படாததால் இவர்களுக்கு அரசு மதிப்பெண் எப்படி கணக்கீடு செய்யும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்த சூழலில்
அரசு தேர்வுத்துறை அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாமல் இருந்தால் அவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்பதை பதிவு விடுப்பு (ஆப்சென்ட்) செய்து அனுப்ப வேண்டும் என தேர்வுத் துறை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்போது ஆப்சென்ட் என்று குறிப்பிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என கல்வியாலளர்கள் கூறினர்.

English summary
New confusion , if 10th grade students did not write quarterly and half yearly exam, mark as obsent in exam: exam department Circular
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X