சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வம்பு வேண்டாம் சிம்பு... மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு... பால் முகவர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சிம்புவுக்கு பால் முகவர்கள் எச்சரிக்கை-வீடியோ

    சென்னை: நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    எனது திரைப்படம் வெளியாகும் போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள்.

    பால் பாக்கெட் வேண்டாம்

    பால் பாக்கெட் வேண்டாம்

    மேலும் கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் குடத்தில் ஊற்றுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிடுவதாக நடிகர் சிம்பு சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நான் வெளிட்ட வீடியோ குறித்து சிலர் விமர்சனம் செய்வதாகவும் எனக்கு ரசிகர்களே இல்லை என விமர்சனம் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சிம்பு பல்டி

    விமர்சனம் செய்தவர்களுக்காக பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். தனது படங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என சிம்பு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிம்புக்கு கண்டனம்

    சிம்புக்கு கண்டனம்

    இந்தநிலையில், தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என தெரிவித்துள்ளனர்.

    வம்பில் சிம்பு

    வம்பில் சிம்பு

    சிலர் பால் மூலம் படத்திற்கு புரமோசன் செய்வதாக கூறுகின்றனர். ஏற்கனவே, சிக்கலில் சிக்கி தவித்த சிம்பு, செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தற்போது, வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகும் முன்பே வம்பில் சிக்கி உள்ளார் சிம்பு.

    English summary
    Tamilnadu milk agents have warned that if the actor Simbu does not apologize, We will Give Complaint
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X