சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் சிவகுமார் எனக்கு புது செல்போன் வாங்கி தர போறார்.. இளைஞர் மகிழ்ச்சி

புதுசெல்போன் வாங்கி தருவதாக நடிகர் சிவகுமார் உறுதி தந்திருப்பதாக இளைஞர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகுமார் பற்றி கருத்து தெரிவித்த அந்த செல்ஃபி இளைஞன்- வீடியோ

    சென்னை: நடிகர் சிவகுமார் விவகாரத்தை இன்னும் முடிக்க விட மாட்டார்கள் போல இருக்கு. "எனக்கு ஒரு செல்போன் சிவகுமார் வாங்கி தந்தால் நல்லாதான் இருக்கும்" என்று சொல்லி இருக்கிறார் செல்போனை இழந்த இளைஞர்.

    சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு வந்தபோது ராகுல் என்னும் இளைஞர் செல்ஃபி எடுக்க முயன்றதால் கடுப்பாகி போன சிவகுமார் செல்போனை தட்டிவிட்டார்.

    If Actor Sivakumar buys me new cellphone i will be happy: Rahul

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக... அதற்கு பெரும்பாலான மக்கள் சிவகுமாரை கடுமையாக விமர்சிக்க... அதற்கு சிவகுமார் விளக்கம் தந்தும் மக்கள் அதனை ஏற்க மறுத்து, மீம்கள் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பிக்க... கடைசியாக வந்து சிவகுமார் மன்னிப்பு ஐ ஆம் ஸாரி என்ற சொன்ன பிறகுதான் விவகாரம் முற்றுப் பெற்றது

    தமிழகத்தில் சூடான பஜ்ஜி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது... சென்னையில் லேசான மழை தமிழகத்தில் சூடான பஜ்ஜி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது... சென்னையில் லேசான மழை

    ஆனால் செல்போனை இழந்த இளைஞர் இன்னும் இந்த பிரச்சனையை விடவில்லை. ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அன்னைக்கு மருத்துவமனையை திறக்க அமைச்சர் உதயகுமார் வந்தார். அவருடன்கூட செல்பி எடுத்தேன். ஆனால் நடிகர் சிவகுமார்தான் இப்படி கோபப்பட்டு என் செல்போனை தட்டி விட்டுட்டார். அந்த செல்போன் என்னுடைய கூட இல்லை.

    என் அண்ணனுடையது. அதனோட விலை 19 ஆயிரம் ரூபாய்.... அது உடைஞ்சு போனதுதான் கஷ்டமா இருக்கு. நடிகர் சிவக்குமார் எனக்கு புதிய செல்போன் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். அப்படி எனக்கு புது செல்போன் கிடைத்தால் மகிழ்ச்சிதான்" என்று இளைஞர் கூறியுள்ளார்.

    English summary
    If Actor Sivakumar buys me new cellphone i will be happy: Rahul
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X